மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் 1993 ஆம் ஆண்டு மொஹாலி டெஸ்டில் வென்றது. அதன் பிறகு இந்தியாவில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் கூட அந்த அணி வெற்றி பெற்றது கிடையாது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் என யாருமே இல்லை. ஆனால் இந்தியா தனது முழு பலத்துடன் இந்த டெஸ்டில் விளையாடியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய அந்த அணியில் யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
இந்தியா ஆதிக்கம்:
நடுவரிசை வீரர்கள் ராஸ்டன் செஸ் சாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அதை பெரிய ஸ்கோராக மாற்ற தவறிவிட்டனர்.
இதனால் அந்த அணி 44.0 ஓவரில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் சிராஜ் நான்கு விக்கெட்களும் பும்ரா மூன்று விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்திற்கு மேல் ஜெய்ஸ்வால் கொஞ்சம் அதிரடி காட்ட முயன்றார். அப்போது ஆப் சைடில் சென்ற பந்தை அடிக்க முற்பட்டபோது, அது கேட்ச் ஆனது.
சாய் சுதர்சன் ஏமாற்றம்:
இதனால் 36 ரன்களில் வெளியேறினார். 3வது வீரராக களம் இறங்கிய சாய் சுதர்சன் மீது பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். காரணம் இந்திய மண்ணில் நடைபெறும் டெஸ்டில் தற்போது தான் சாய் சுதர்சன் இந்த இடத்தில் விளையாடுகிறார். ஆனால் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் தொடர்.. இது மட்டும் நடக்கலனா அவ்வளவு தான்.. சக வீரர்களுக்கு எச்சரிக்கை தந்த கில்
எனினும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் அரைசதம் அடித்தார்.முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருக்கிறது. இது வெஸ்ட் இண்டீஸ் ஸ்கோரை விட 41 ரன்கள் குறைவாகும்.






