பாகிஸ்தான் டீம் மதிக்க தகுதி இல்லாதது.. நாங்க ஆசிய கோப்பைல செஞ்ச அதுவே பெருசு – அமித் மிஸ்ரா பேச்சு

0
51
Amit

இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க வேண்டிய அவசியம் இல்லை, கிரிக்கெட் சட்டத்தில் அப்படி எதுவும் இல்லை என இந்திய முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இந்திய அணி வீரர்கள் அவர்களுடன் போட்டி முடிவில் கை கொடுக்கவில்லை. மேலும் ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் உள்துறை அமைச்சரிடம் இருந்தும் வாங்கவில்லை.

- Advertisement -

ஏதாவது விதி இருக்கிறதா?

இந்த நிலையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் நட்பு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுடன் கைகுலுக்க வேண்டிய தேவை கிடையாது, மேலும் நாம் மரியாதை கொடுக்கும் அளவுக்கு அவர்கள் இல்லை என அமித் மிஸ்ரா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

இதுகுறித்து அமித் மிஸ்ரா பேசும்பொழுது “நாம் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்க வேண்டும் என்று ஏதாவது அவசியம் இருக்கிறதா? உங்களுடன் நாங்கள் நட்பு கொள்ள எந்த விதத்திலும் விரும்பவில்லை. அதனால் உங்களுக்கு நாங்கள் கை கொடுக்கவில்லை. இது எங்களுடைய தனிப்பட்ட விருப்பம். இதை கட்டாயம் செய்ய வேண்டுமென கிரிக்கெட் சட்டத்தில் விதி இருக்கிறதா?”

- Advertisement -

தகுதி இல்லாதவர்கள்

“நாங்கள் மூன்று போட்டிகளில் உங்களுக்கு எதிராக விளையாடினோம். அந்த மூன்று போட்டிகளிலும் உங்களை தோற்கடித்து விட்டோம். இதற்கு பிறகு உங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்களிடம் நட்பு பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நாங்கள் ஏன் அப்படி செய்ய வேண்டும்? இது எங்களுடைய தனிப்பட்ட விருப்பம்”

இதையும் படிங்க : இந்தியாவை பாகிஸ்தான் அணியால் மிஞ்ச முடியாது.. அவர்கள் நினைக்கும் அது அவமானம் – இங்கி ரவி போபரா பேச்சு

“ஒட்டு மொத்த இந்திய அணிக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் அவர்களுடைய வார்த்தையில் உறுதியாக இருந்தார்கள். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்று நினைத்தால் விளையாடவும் செய்ய மாட்டோம். இதற்காக எங்களுக்கு அபராதம் விதித்தால் நாங்கள் அதையும் செலுத்துவோம். நாங்கள் உங்களை மதித்து முதலில் உங்களுடன் விளையாடி இருக்கிறோம். ஆனால் உண்மையில் நீங்கள் அதற்கு தகுதியானவர் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -