இந்திய பவுலர்கள் ஆக்ரோஷமா நடக்கட்டும் பிரச்சனை இல்லை.. ஆனா சூர்யா செஞ்சது தப்பு – சல்மான் அலி ஆகா கருத்து

0
183
Salman

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காத சம்பவம் குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதல் முறையாக பேசியிருக்கிறார்.

நாளை நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டிக்கு முன்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து பாகிஸ்தான் கேப்டன் வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன் பார்த்ததில்லை

இந்திய அணி பாகிஸ்தான் அணி உடன் ஆசியக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் விளையாடிய முடித்ததும் கைகுலுக்காமல் உள்ளே சென்று விட்டது. இந்த சம்பவத்தை ஒட்டி நிறைய சர்ச்சையான விஷயங்கள் நடந்து கொண்டிருந்தது. ஆனால் பாகிஸ்தான் கேப்டன் இதுவரையில் இதைப் பற்றி பேசவில்லை.

தற்போது இது குறித்து சல்மான் அலி ஆகா கூறும்போது “நான் 2007 ஆம் ஆண்டு முதல் தொழில்முறை கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அதிலிருந்து இரண்டு அணிகள் கைகுலுக்காத சம்பவத்தை நான் பார்த்தது கிடையாது. என் தந்தையும் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். கிரிக்கெட் குறித்து அவர் எனக்கு பல கதைகளை கூறியிருக்கிறார். ஆனால் இப்படியான ஒரு சம்பவத்தை அவரும் எனக்கு சொன்னது கிடையாது”

- Advertisement -

இதைவிட மோசமான சூழ்நிலைகள்

” 20 வருடங்கள் பின்னோக்கிப் போய் பார்த்தாலும் அப்படி எந்த சம்பவங்களும் இல்லை. மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இதைவிட மோசமான காலகட்டத்தில் விளையாடி இருக்கின்றன. ஆனால் அப்போது கூட கை கொடுக்காமல் இருந்தது கிடையாது. இப்படி செய்வது கிரிக்கெட்டுக்கு நல்லது இல்லை என்று நான் நினைக்கிறேன்”

இதையும் படிங்க : அபிஷேக் சர்மா நொறுக்க காத்திருக்கும்.. ரோகித் ரிஸ்வானின் மெகா ரெக்கார்டு.. பைனலில் பறக்குமா கொடி?

“வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருந்து ஆக்ரோஷத்தை கழித்து விட்டால் எதுவுமே இருக்காது. நான் அவர்களின் ஆக்ரோஷத்தை எப்பொழுதும் தவறாக எடுப்பதில்லை. இரு தரப்பிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆக்ரோஷமாக இருந்தால் அதை நான் வரவேற்கவே செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -