ஹர்ஷித் ராணா ஆரம்ப லெவலுக்கு போயிட்டார்.. இந்த மாதிரி தப்பு செய்தா யார் விடுவாங்க? – அஸ்வின் விமர்சனம்

0
49
Ashwin

நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஹர்ஷித் ராணா பந்து வீசிய விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா மொத்தம் நான்கு ஓவர்கள் பந்துவீசி 53 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அவர் பந்து வீசிய எல்லா ஓவர்களிலும் இலங்கை பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் எடுத்த காரணத்தினால் போட்டி சூப்பர் ஓவர் வரையில் சென்று விட்டது.

- Advertisement -

கம்பீர் கோட்டா

தற்போது சிறப்பான பவுலிங் பார்மில் இருக்கும் முகமது சிராஜ் ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என ஆரம்பத்திலேயே கருத்துகள் வந்தன. ஆனால் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டதுடன் அவருக்கு கிடைத்த வாய்ப்பில் அவர் சரியாக செயல்படாதது பெரிய விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது.

இந்திய பயிற்சியாளர் கம்பீர் கொல்கத்தா அணியின் மெண்டராக இருந்த காரணத்தினால் அங்கிருந்த ஹர்ஷித் ராணாவுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் குற்றச்சாட்டை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் இவரது பந்துவீச்சை விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

ஆரம்ப லெவலில் இருந்தது

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “நான் ஹர்ஷித் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். அவர் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது சில போட்டிகளில் வெளியில் இருந்தார். இப்படி இருந்த உடனே வந்து செயல்படுவது என்பது சிரமமான விஷயம். இது வீரரின் தன்னம்பிக்கையை குறைக்கும். ஆனால் நேற்றைய போட்டியில் அவர் செய்த தவறுகள் ஆரம்ப லெவலில் இருந்தது. இதனால் போட்டி பவர் பிளேவிலேயே முடிந்துவிட்டது என நான் நினைத்தேன். ஆனால் இந்திய பவுலர்கள் சிறப்பான கம் பேக் கொடுத்தார்கள்”

இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில்.. காயமடைந்த அபிஷேக் ஹர்திக் ஆடுவார்களா? – கோச் மோர்கல் பதில்

“ஹர்ஷித் ராணா ஒரு பந்தை மிகவும் வேகமாக வீசுவதும் இன்னொரு பந்தை மெதுவாக வீசுவதும் என ஒவ்வொரு பந்துக்கும் அதையே மாற்றி மாற்றி செய்தார். இது பந்துவீச்சில் மிகவும் ஆரம்ப லெவலில் இருப்பதை காட்டியது. இதெல்லாம் சர்வதேச தரத்திற்கு போதாது. மேலும் அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -