அபிஷேக் ஷர்மா ஓபனிங் ஆடக்கூடாது.. சூர்யா ரன் எடுக்கலன்னா பிரச்சனை கிடையாது – தினேஷ் கார்த்திக் பேச்சு

0
86
Abhishek

இன்று ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை கீழ் வரிசையில் விளையாட வைக்கலாம் என தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார்.

இந்திய அணி இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில் இன்று இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போட்டியில் கிடைக்கும் வெற்றி தோல்வி எந்தவித தாக்கத்தையும் உண்டாக்காது.

- Advertisement -

இந்திய அணியின் சிக்கல்

இந்த தொடரில் இந்திய அணிக்கு பவர் பிளேவில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தரும் அதிரடியான துவக்கம் தான் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. பேட்டிங் யூனிட்டில் மற்ற எந்த வீரர்களும் சொல்லிக் கொள்ளும் அளவில் இதுவரையில் விளையாடவில்லை.

அபிஷேக் ஷர்மா தற்போது ஐந்து போட்டிகளில் 200 ரன்கள் தாண்டி இரண்டு அரை சதங்களுடன் எடுத்திருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கடந்த எட்டு போட்டிகளாக இன்னும் பெரிதாக எதையும் செய்யவில்லை. மேலும் அணியில் சஞ்சு சாம்சன் இடம் என்னவென்று தெரியவில்லை. இது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.

- Advertisement -

அபிஷேக் இடத்தை மாற்றலாம்

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” தற்போது அபிஷேக் சர்மா தான் பேட்டிங் செய்ததில் மகிழ்ச்சியுடன் இருந்தார் என்றால், அவரை பேட்டிங்கில் கீழ் வரிசைக்கு கொண்டு வந்து சூர்யா அல்லது திலக் வர்மாஅவரை பேட்டிங்கில் கீழ் வரிசைக்கு கொண்டு வந்து சூர்யா அல்லது திலக் வர்மா போன்றோரை மேலே விளையாட வைக்கலாம். நான் கம்பீர் இடத்தில் இருந்தால் தொடர்ந்து ஒரே அணியுடன் செல்வேன். ஒரு பவுலருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் தவிர, மற்றபடி அதே அணியுடன் இன்னொரு போட்டியை வெல்ல பார்ப்பேன்”

இதையும் படிங்க : நாங்க முன்னேறிட்டே வரோம்.. இத மட்டும் செஞ்சா ஜெயிச்சிடுவோம்.. அபிஷேக்தான் பிரச்சனை – பாக் பயிற்சியாளர் பேட்டி

“இந்தியாவின் பேட்டிங் எப்படி இருக்கிறது என்பது குறித்து எனக்கு எந்த விதமான கவலையும் கிடையாது. சூர்யா ரன்கள் எடுக்க வேண்டுமா என்றால் ஆமாம் எடுக்க வேண்டும். அதே சமயத்தில் சஞ்சு மற்றும் அச்சர் படேல் போன்றவர்களுக்கு கூடுதல் பேட்டிங் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்க மாட்டேன். சில நேரங்களில் நாம் கடுமையாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -