இந்திய அணியின் இளம் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மா பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியை நெட் ஸ்பின்னர் போல விளையாடினார் என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்று போட்டிகள் துவக்க ஜோடி சிறப்பாக விளையாடி ஆட்டம் இழந்த பிறகு, உள்ளே வந்த திலக் வர்மா ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் அடுத்தடுத்து சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
மீண்டு வந்ததிலும் சோகம்
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் லெஜன்ட் சுனில் கவாஸ்கர் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டி குறித்து பரபரப்பான முறையில் பேசியிருக்கிறார். இதில் பாகிஸ்தான் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடியது என்பது குறித்து கூறியிருக்கிறார்.
இது பற்றி சுனில் கவாஸ்கர் பேசும்போது “இந்த ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு வந்த போது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஓரளவுக்கு மேம்பட்டு இருந்தது. அவர்கள் முதல் 10 ஓவர்களில் நல்ல முறையில் விளையாடி ரன்கள் எடுத்து மீண்டும் வந்தார்கள். ஆனால் மூன்று விக்கெட்டுகளை இழந்ததும் மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்டார்கள். கடைசி மூன்று ஓவர்களில் அவர்கள் அதிக ரன்கள் எடுத்தாலும் கூட, விரும்பியதில் 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டார்கள்”
நெட் ஸ்பின்னர்தான் ஷாகின்
“இந்தியா இதற்கு அடுத்து அசர வைக்கும் துவக்க ஜோடியின் ஆட்டத்தால் வெற்றியை மிகவும் எளிதாக்கி கொண்டது. அபிஷேக் மற்றும் கில் இருவரின் மெய்சிலிர்க்க வைக்கும் தொடக்கத்தினால் பார்வையாளர்கள் அசந்து போனார்கள். மேலும் இந்திய அணி சுலபமான வெற்றியை பெற்றது”
இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2025.. பும்ரா தடுமாறுவதுக்கு இது தான் காரணம்.. முன்னாள் ஆர்சிபி வீரர் கருத்து
“இவர்களுக்கு அடுத்து இந்தியாவில் இன்னொரு இளம் திறமையான பேட்ஸ்மேன் திலக் வர்மா, பாகிஸ்தானின் நட்சத்திரம் ஃபாஸ்ட் பவுலர் ஷாகின் அப்ரிடியை வெறும் வலை பயிற்சியில் விளையாடும் ஸ்பின்னரை விளையாடுவது போல விளையாடினார். எல்லா திசைகளிலும் வெளுத்து வாங்கினார். இந்திய அணியை வெற்றி எல்லையை தொடவும் வைத்தார்” என்று கூறியிருக்கிறார்.






