மச்சான் சொன்னா புரிஞ்சுக்க.. இன்னைக்கு நீ ஆடலனு வருண் கிட்ட சொல்ல வேண்டியதா இருக்கு – சூரியகுமார் பேச்சு

0
187
Surya

இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் நாளை பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இதற்கு முன்பான சம்பிரதாய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

இந்தியா அணி முதல் சுற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நாளை மீண்டும் மோத உள்ள நிலையில், முதல் போட்டி முடிந்து ஏற்பட்ட சலசலப்புகளால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

கடுமையான வெப்பம்

தற்போது ஆசியக் கோப்பை தொடரில் யுஏஇ வெப்பம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வீரர்கள் மிகவும் சீக்கிரத்தில் களைப்படைகிறார்கள். மேலும் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக தசைப்பிடிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் விளையாட்டு அறிவியல் குழு இந்த விஷயங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதே சமயத்தில் இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியை எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்காமல் இருந்து வருகிறார்கள். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

வருண் இதை செய்வார்

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது ” எங்களுடைய விளையாட்டு அறிவியல் குழு வீரர்கள் உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது குறித்தும், வீரர்களின் ரெக்கவரிலும் தீவிரமான கவனத்தை செலுத்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்கள் தீவிரமான தொழில் முறை கிரிக்கெட் வீரராக இருக்கும் பொழுது இரண்டு நாளில் இன்னொரு போட்டிக்கு தயாராவது வழக்கமான விஷயம்தான். ஐபிஎல் தொடரில் மதிய போட்டிகளில் விளையாடி பழக்கம் இருக்கிறது”

இதையும் படிங்க : பாகிஸ்தான் மேட்ச்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. இனி கம்பீர் அணிதான்.. அஸ்வின் வரை சைலன்ட்டான சம்பவம்

“நேற்று வருண் சக்கரவர்த்தி வலைகளில் பங்கு வைக்கலாம். அவர் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவருக்கு இதுதான் பழக்கம். அவர் வலைக்கு வந்தால் குறைந்தது 8 முதல் 10 ஓவர்கள் பந்து வீசுவார். அவர் மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார். நான் அவரிடம் ‘மச்சான் இன்னைக்கு உனக்கு ரெஸ்ட்’ என்று சொல்ல வேண்டியதாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -