ஆசிய கோப்பையில் நீக்கம்.. என்னுடைய நேரம் வரும்.. நான் இவங்கள நம்பல – மனம் திறந்த ஜெய்ஸ்வால்

0
85
Jaiswal

2025 நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தான் தேர்வு செய்யப்படாதது குறித்து முதல் முறையாக இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

தற்போது துணை கேப்டனாக இந்திய டி20 அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தில் சஞ்சு சாம்சங் அல்லது ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்பது இந்திய முன்னாள் வீரர்களின் பலரது கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் தகுதி இருந்தும் தான் தேர்வு செய்யப்படாத குறித்து முதல் முறையாக ஜெய்ஸ்வால் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அசத்தும் புள்ளிவிபரம்

தற்போது இந்திய டெஸ்ட் அணிக்கு மட்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ஜெய்ஸ்வால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலிக்கு அடுத்து வெற்றிகரமாக இருக்க முடிந்த வீரராக இருப்பார் என பலரும் கணித்திருந்தார்கள். அவருக்கு ஏற்ற வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவருக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் 23 போட்டிகளில் விளையாடி 723 ரன்கள், 36 ரன் ஆவரேஜ் மற்றும் சிறப்பான 164.31 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 159 ஸ்ட்ரைக் ரேட்டில் 559 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

எனக்கான நேரம் வரும்

இது குறித்து ஜெய்ஸ்வால் பேசும் பொழுது ” ஆசியக் கோப்பை இந்திய அணியில் என்னை தேர்வு செய்யாதது குறித்து நான் எதுவும் யோசிக்கவில்லை. இதுவெல்லாம் தேர்வாளர்களின் கைகளில் இருக்கிறது. காம்பினேஷனை வைத்து அணி தேர்வு செய்யப்படுகிறது. ஆனால் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனக்கான நேரம் வரும்பொழுது விஷயங்கள் சரியாக நடக்கும். என்னை நானே மேம்படுத்திக் கொண்டு கடுமையாக உழைக்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் போட்டி.. சூரியகுமார் யாதவ் தந்த வேற லெவல் ஒரு வரி பதில்.. வாயடைத்த வர்ணனையாளர்

“நான் பெரிய அளவில் ஏதாவது செய்வேன் என்கின்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருக்கிறது. நான் இதை எப்போதும் நிறுத்த மாட்டேன் கடினமாக உழைப்பேன். நான் என்னைப் பற்றி மட்டும்தான் நம்புகிறேன். இந்திய அணிக்காக உலக கோப்பையை வெற்றி பெற்று தர வேண்டும் என்பதுதான் என்னுடைய இறுதி லட்சியமாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றது மறக்க முடியாதது. இந்தியா திரும்பிய பொழுது அற்புதமான வரவேற்பு கிடைத்தது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -