ஒமன் மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கு எதிராகவும் பும்ராவுக்கு ஓய்வு கொடுங்கள்.. பங்கமாக சல்மான் படையை கலாய்த்த கவாஸ்கர்

0
18

ஆசிய கோப்பை 2025 ஆம் ஆண்டு தொடரில் ஓமன் அணிக்கு எதிராக மட்டுமல்ல பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும்   ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஒய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, ஆபுதாபியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் தங்களது குரூப் ஸ்டேஜ் கடைசி போட்டியில் ஓமனை எதிர்கொள்கிறது.

இந்திய அணி ஏற்கனவே சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், ஜஸ்பிரீத் பும்ராவை ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வு அளிக்க வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டியிலும் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும், இதனால் இறுதிப் போட்டிக்கு அவர் புத்துணர்ச்சியுடன் இருப்பார் என்று அவர் கூறினார்.

- Advertisement -

பும்ராவுக்கு ஓய்வு தேவை:

இது குறித்து பேசிய அவர், “ஜஸ்பிரீத் பும்ராவை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் ஓய்வு அளிக்க வேண்டும்.  இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கியமான இறுதிப் போட்டிக்கு அவர் தயாராக இருப்பார். இந்திய அணி இதை கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக, ஒரு மாற்று வீரரை அணியில் சேர்க்க வேண்டியிருக்கும்.”

“இதனால் பும்ராவுக்கு ஓமன் எதிரான போட்டியில் ஓய்வு அளிக்க வேண்டும்” என்று கவாஸ்கர் கூறினார்.இந்திய அணி, வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் சூப்பர் ஃபோர் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. முன்னதாக குரூப் ஸ்டேஜில் இந்த இரு அணிகளும் மோதியபோது, இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.

- Advertisement -

பும்ராவின் செயல்பாடு:

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சூப்பர் ஃபோர் சுற்றில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராகவும் விளையாடவுள்ளது. ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டி செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற உள்ளது.ஜஸ்பிரீத் பும்ரா, இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.

ஆசிய கோப்பை 2025-க்கு முன்பு, அவர் கடைசியாக 2024 டி20 உலகக் கோப்பையில் டி20 கிரிக்கெட் விளையாடியிருந்தார்.இந்த தொடரில் இதுவரை, பும்ரா இரண்டு போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 15.66 மற்றும் எகானமி ரேட் 6.71 ஆகும். முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 3 ஓவர்களில் 19 ரன்களுக்கு ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க: என்னை எதுக்கு அழைச்சிட்டு வந்தீங்க? சாம்சன் நினைக்க தொடங்கிவிடுவார்.. இன்றைய ஆட்டத்தில் தயவு செய்து இதை பண்ணுங்க.. ஆகாஷ் சோப்ரா

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா 2016-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 சர்வதேச அறிமுகமானார். இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் முக்கிய வீரராக திகழ்கிறார். இதுவரை 72 போட்டிகளில் விளையாடி, 17.67 சராசரியில் 92 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், எகானமி ரேட் 6.29 ஆகும்.

- Advertisement -