பாகிஸ்தான் கிரிக்கெட் உருப்படாம போக காரணம் இதுதான்.. எங்க ஹாக்கிய பாருங்க புரியும் – கம்ரன் அக்மல் பேச்சு

0
99
Akmal

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் சரிவை சந்தித்து வருவதற்கான காரணங்கள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கம்ரன் அக்மல் மிகவும் வேதனையாக பேசியிருக்கிறார்.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பாகிஸ்தான் கிரிக்கெட் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அவர்கள் இந்த வருடத்தில் சொந்த மண்ணிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தார்கள். மேலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார்கள்.

- Advertisement -

பாதுகாப்பு காரணம்

உலக கிரிக்கெட்டில் பெரிய அணிகள் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் சென்று விளையாடுவதை பல ஆண்டுகள் தவிர்த்து வந்தன. இதன் காரணமாக பாகிஸ்தான் அணிக்கு வருமானம் குறைந்தது. இதன் காரணமாக அவர்களால் உள்நாட்டு கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு முதலீடு செய்ய முடியவில்லை.

எனவே பாகிஸ்தானில் இருந்து இளம் திறமைகள் உருவாவது தடுக்கப்பட்டது. இத்துடன் உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருக்கும் அரசியல் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. ஒரே அணியில் நான்கு குழுக்களாக வீரர்கள் இருப்பார்கள். மேலும் இவர்களை தேர்வு செய்வதிலும் பெரிய அரசியல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுதான் முக்கிய காரணம்

இதுகுறித்து கம்ரன் அக்மல் பேசும்பொழுது “பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சரிவை நாம் உள்நாட்டு கிரிக்கெட்டில் செய்து கொண்ட சமரசங்கள் மூலமாக புரிந்து கொள்ளலாம். வீரர்களை தேர்வு செய்வது அவர்களுடைய திறமைகளை வைத்து இல்லாமல் தனிப்பட்ட நபர்களுடைய விருப்பங்களை வைத்து செய்யப்படுகிறது. இதனால் அணிக்கு எது சிறந்தது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. இது தனிப்பட்ட நபர்களின் ஈகோவை தீர்த்துக் கொள்ள பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சிறந்த வீரர்கள் கிடைக்கவில்லை”

இதையும் படிங்க : எங்க டீம் சின்ன பசங்களை குறி வச்சுட்டாங்க.. அஜெண்டா இருக்கு வீரர்களை காப்பாத்தணும் – முகமது அமிர் விமர்சனம்

” பாகிஸ்தானில் ஹாக்கி அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆனால் கிரிக்கெட் கார்ப்பரேட் நிறுவனங்களால் இயக்கப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் தான் ஸ்பான்சர் தருகிறார்கள். ஆனால் தற்போது தொடர்ந்து வரும் தோல்விகளால் இதற்கும் பிரச்சனை வர போகிறது. இருந்தாலும் கூட கடந்த பத்து தொடர்களாக சரியாக விளையாடாத ஒரு அணி எந்த ஒரு தொடரில் தோற்பதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -