இந்திய அணி மீண்டும் உலகத்தின் முன்னால் அவமானப்படும்.. ஆனா இந்திய வீரர்களை குறை சொல்லல – ஷாகித் அப்ரிடி விமர்சனம்

0
543
Shahid

ஆசியக் கோப்பை தொடரில் போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்காதது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியாவில் காஷ்மீரில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தின் காரணமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்கவில்லை. இதற்கு இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் வெளிப்படையான முறையில் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியா செய்ததில் ஆச்சரியம் இல்லை

இதுகுறித்து பேசி இருக்கும் ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது ” ஆசிய கோப்பை தொடங்கிய பொழுதே இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக சமூக ஊடகங்கள் புறக்கணிப்பு பிரச்சாரங்களால் நிரம்பி இருந்தது. இப்படியான அழுத்தம் இருந்த காரணத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய வீரர்கள் எங்களுடன் கைகுலுக்காதது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை”

“என்னுடைய கருத்துப்படி இந்திய வீரர்களுக்கு விளையாட்டு உணர்வு இல்லை. அவர்கள் மீண்டும் உலகத்தின் முன் அவமானப்படுவார்கள். இந்த விஷயத்தில் எங்களுடைய நிலைப்பாடு தெளிவாக தெரிவிக்கப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன். எங்கள் கிரிக்கெட் வாரிய தலைவர் சரியான முடிவு எடுத்திருக்கிறார்”

- Advertisement -

வீரர்களை குறை சொல்ல மாட்டேன்

“வீரர்கள் எப்பொழுதும் நல்ல தூதுவர்களாக இருக்க வேண்டும். ஆனாலும் இதை அவமானம் என்று சொல்ல மாட்டேன். நான் இந்திய வீரர்களை குறை கூற விரும்பவில்லை. அவர்களுக்கு மேலிருந்து உத்தரவுகள் வழங்கப்பட்டு இருக்கும்”

இதையும் படிங்க : 2 போட்டி.. 7 விக்கெட்.. குல்தீப் இதை செஞ்சுதான் அதிகமா விக்கெட் எடுக்கிறாரு.. ரகசியம் உடைக்கும் இந்திய துணை கோச்

“அதே சூரியகுமார் யாதவ் தொடருக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் எங்கள் கேப்டன் மற்றும் கிரிக்கெட் வாரிய தலைவர் உடன் கைகுலுக்கினார். இப்போது இருக்கும் அழுத்தத்தின் காரணமாக அரசாங்கத்தால் இதை கையாள முடியவில்லை. இதனால் இந்திய வீரர்கள் உலகத்தின் முன் சங்கட்டமாக நிற்க வேண்டியதாகி விட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -