2025 ஆசிய கோப்பை.. ஆட்டத்தையே மாற்றக் கூடிய 8 ஓவர்கள்..பாகிஸ்தானில் 2 பேட்டர்ஸ் விக்கெட் தான்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

0
46

2025 ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோத உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் முக்கிய பங்காற்றுவார்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

குல்தீப், இந்தியாவின் ஆசிய கோப்பை முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இதே போன்று கடந்த ஆண்டு இந்திய அணிக்கு திரும்பியதிலிருந்து தமிழ்நாடு சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அபாரமான ஃபார்மில் உள்ளார்.

- Advertisement -

8 ஓவர் முக்கியம்:

கடந்த போட்டியில் அவர் இரண்டு ஓவர்களில் 1 விக்கெட் வீழ்த்தி 4 என்ற அற்புதமான பந்துவீசி அசத்தினார். முடித்தார். இந்த நிலையில். காலம் காலமாக பாகிஸ்தான் அணி லெக் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறி வருவதாக சோப்ரா சுட்டிக்காட்டினார். இது குறித்து பேசிய அவர், “பந்துவீச்சு கண்ணோட்டத்தில், இந்தியாவின் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ், போட்டியை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும்.

காலம் காலமாக, பாகிஸ்தான் அணி லெக்-ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாடவில்லை. அது இடது கை லெக்-ஸ்பின்னாக இருந்தாலும் அல்லது வலது கை லெக்-ஸ்பின்னாக இருந்தாலும், அவர்கள் திணறுகிறார்கள். அந்த எட்டு ஓவர்கள் இந்தப் போட்டியை தீர்மானிக்கலாம். மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,”

- Advertisement -

2 விக்கெட் முக்கியம்:

“இருவரும் கவனத்தில் இருப்பார்கள், முகமது ஹாரிஸ் கடந்த போட்டியில் அரைசதம் அடித்து ரன்கள் குவித்தார். அவர்களிடம் ஃபகார் ஸமான் என்ற முக்கிய வீரரும் உள்ளது. எனவே, ஆட்டத்தில் அவர்களை வெளியேற்ற முடிந்தால், போட்டி விரைவாக இந்தியாவுக்கு சாதகமாக மாறலாம்,” என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.

இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக 13 டி20 போட்டிகளில் மோதி 10 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்டிதயுள்ளது. வைத்துள்ளது. இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானும் ஒரு வெற்றியுடன் இந்தப் போட்டிக்கு வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையும் பாருங்க: இந்தியாவை ஜெயிக்கணும்னு நினைக்காதிங்க.. தயவுசெய்து இதையாவது பண்ணுங்க – வாசிம் அக்ரம் வேண்டுகோள்

அதேசமயம் சல்மான் அலி ஆகாவின் அணி ஓமானுக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு போட்டிகளும் துபாயில் நடைபெற்றன.பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக ரசிகர்களிடமிருந்து கடும் விமர்சனங்களைபிசிசிஐ எதிர்கொண்டு வருகிறது. பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டியை ஒப்பிடும்போது டிக்கெட்டுகளுக்கான ஆர்வம் மிகவும் குறைவாகவே ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

- Advertisement -