பாகிஸ்தானின் இந்த அணுகுமுறையை வாசிம் அக்ரம் வெறுப்பார்.. இந்தியாவுக்கே இது புதுசுதான் – மஞ்ச்ரேக்கர் பேச்சு

0
36
Manjrekar

தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி கொண்டு வந்திருக்கும் புதிய அணுகுமுறை ஒன்றை வாசிம் அக்ரம் வெறுக்கலாம் என இந்திய முன்னாள் வீர சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியிருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நாளை மோதிக்கொள்ள இருக்கின்றன. இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து பிளேயிங் லெவனை அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வாசிம் அக்ரம் வெறுக்கலாம்

இது குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது “பாகிஸ்தானின் இந்த பந்துவீச்சு காம்பினேஷனை நான் விரும்புகிறேன். ஏனென்றால் இது இந்தியா பாகிஸ்தான் போட்டியில் வருகிறது. பாகிஸ்தானின் இந்த சுழல் பந்துவீச்சு அணுகுமுறை பேட்ஸ்மேன்களை அதிகமாக யோசிக்க வைக்கும்”

“இந்தியா இது போன்ற பெரிய நிகழ்வுகளில் பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய முறை ஏற்கனவே விளையாடி இருக்கிறது. அப்பொழுது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கும். தற்பொழுது முழுக்க சுழல் பந்து வைத்துக் முன்னுரிமை கொடுக்கிறது. வேகம் இல்லாத காரணத்தினால் பாகிஸ்தானில் இந்த புதிய அணுகுமுறையை வாசிம் அக்ரம் வெறுக்கலாம்”

- Advertisement -

புதிய பயிற்சியாளரின் திட்டம்

“பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் மைக் ஹெசன் பாகிஸ்தான் அணியில் தனக்கு கிடைத்ததை வைத்து சிறப்பான முறையில் பயன்படுத்தி இருக்கிறார். சையும் அயூப் கடந்த காலத்தில் பெரிய அளவில் பந்து வீசவில்லை. ஆனால் இவர் பயிற்சியாளராக வந்த பிறகு 90 சதவீதம் பந்துவீசி இருக்கிறார். மேலும் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்கில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்கும் பிசிசிஐ.. விசித்திரமான முடிவு.. காரணம் என்ன? – வெளியான தகவல்கள்

தற்போது தொடர் நடைபெறும் யுஏஇ கண்டிஷனுக்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய பௌலிங் யூனிட் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால் பேட்டிங் யூனிட்டை பொருத்தவரையில் பாகிஸ்தான் அணியை விட இந்திய அணி வலிமையானதாக இருக்கிறது. இந்த அடிப்படையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -