இந்திய அணி தற்போது நல்ல நம்பிக்கையில் இருக்கும் என தங்களுக்கு தெரியும் எனவும், அதே சமயத்தில் தாங்கள் சிறப்பாக தயாராகி வருவதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்து இருக்கிறார்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
பலம் அதிகரித்த பாகிஸ்தான்
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்னுக்கு சுருட்டி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது துபாய் கண்டிஷனுக்கு ஏற்ற வகையில் பிளேயிங் லெவனில் சிறப்பான நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்துக் கொள்ள பாகிஸ்தான அணியால் முடிகிறது.
மேலும் தற்போதைய பாகிஸ்தான் அணியில் அப்ரார் அகமது, சுபியான் முகீம் இருவர் மட்டுமே முழுமையான பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்கள். இதனால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை ஒன்பது வரையில் நீளமாக இருக்கிறது. இந்த முறை பாகிஸ்தான் அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியை தெரியும்
இந்த போட்டி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறும் பொழுது ” ஒரு போட்டி என்பது எனது பார்வையில், அது உலகக் கோப்பையில் இறுதி போட்டியாக இருந்தாலும் இல்லை வேறொரு போட்டியாக இருந்தாலும், அது நம் கையில் இருக்கும் வேலையில் நாம் எப்படி கவனம் செலுத்துகிறோம் என்பதுதான். எனவே எங்களுக்கு இந்திய அணிக்கு போட்டி வித்தியாசமானதாக இருக்காது”
இதையும் படிங்க : கில் கேப்டனா இருக்கும் குஜராத் அணியில் கூட.. இதை செஞ்சு நாங்க பாக்கவே இல்ல – கோச் பார்த்தீவ் பட்டேல் ஆச்சரியம்
“இந்தியா தங்களது முதல் போட்டியில் மிகவும் நம்பிக்கையுடன் மிகவும் சரியான விளையாடியது என்று எங்களுக்கு தெரியும். 4.3 ஓவரில் வெற்றி பெற்று இருக்கிறது. அதே சமயத்தில் நாங்கள் ஒரு அணியாக முன்னேறுவதில் மிகவும் கவனம் செலுத்துகிறோம். மேலும் இதை நாங்கள் நாளுக்கு நாள் செய்து வருகிறோம். நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்” என்று கூறி இருக்கிறார்.






