21 முறை டக் அவுட் ஆனாலும்.. 22வது முறை ஆடுவாய்.. இந்திய வீரருக்கு நம்பிக்கை கொடுத்த கம்பீர்.. அஸ்வின் ஓபன் டாக்

0
60

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

எட்டு நாடுகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் துபாய் அணிகள் மோதி விளையாடின. இதில் முதலில் விளையாடிய யுனைடெட் அணி 13.1 ஓவர்கள் முடிவில் 57 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதற்குப் பின்னர் விளையாடிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு நான்கு ஓவர்களில் 60 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் நேற்று இந்திய அணி விளையாடிய பிளேயிங் லெவனில், விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் மிடில் வரிசைக்கு மாற்றப்பட்டார், இந்திய அணியில் மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் கூட தொடக்க இடத்தில் விளையாடி வரும் அவர், மிடில் வரிசைக்கு மாற்றி இருப்பதை கண்டு ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். சூரியகுமார் மற்றும் கம்பீர் இருவரும் சாம்சனை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் எனவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் அதே வேலையில் சஞ்சுவுக்கு கிடைக்கும் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் அவரை எப்படி ஆதரித்துக் கொள்கிறார்கள் என்பதை பார்க்க அற்புதமாக உள்ளது. நாங்கள் அவரை கவனித்துக் கொள்கிறோம் என்று சூரியகுமார் யாதவ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். சஞ்சு சாம்சன் விளையாட வேண்டும் என்றால் பவர் பிளேவில் செயல்படுத்துபவராக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:50 ரன் 200 ரன்.. இந்த பையனுக்கு மேட்டர் கிடையாது.. நான் நினைச்ச 2 விஷயம் கிடைச்சது – சூரியகுமார் யாதவ் பேட்டி

பவர் பிளேவில் 1 விக்கெட் விழுந்தால் சாம்சன் உள்ளே நுழைகிறார். நான் சாம்சனை ஒரு முறை நேர்காணல் செய்த போது அவர், 21 முறை டக் அவுட் ஆனாலும் 22 ஆவது முறை அவர் லெவனில் விளையாடுவார் என்று கம்பீர் கூறியதாக கூறினார். இது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் அவருக்கு அளித்த நம்பிக்கையாகும். எனவே இதன் மூலமாக அவர் மீது அணி நிர்வாகம் பெரிய அளவில் நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்

- Advertisement -