50 ரன் 200 ரன்.. இந்த பையனுக்கு மேட்டர் கிடையாது.. நான் நினைச்ச 2 விஷயம் கிடைச்சது – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
493
Surya

இன்று ஆசியக் கோப்பை தொடரில் யுஏஇ அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசி இருக்கிறார்.

மேலும் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரையும் நீக்காமல் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் சிவம் துபேவை மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக வைத்துக் கொண்டு அர்ஸ்தீப் சிங் நீக்கப்பட்டார். பேட்டிங் வரிசையும் 8 வரையில் நீட்டிக்கப்பட்டது.

- Advertisement -

இந்திய அணி அபார வெற்றி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி வெறும் 13.1 ஓவரில் 57 ரன் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் நான்கு விக்கெட் கைப்பற்றினார். மேலும் சிவம் துபே மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 16 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் வெளியேறினார். இன்னொரு புதிய தொடக்க ஆட்டக்காரர் துணை கேப்டன் கில் ஆட்டம் இழக்காமல் 9 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 4.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

எதிர்பார்த்தது கிடைத்தது

இந்த வெற்றி குறித்து பேசி உள்ள சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “இந்த விக்கெட் எப்படி செயல்படுகிறது என்று பார்க்க விரும்பினேன். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்தது. வீரர்கள் சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தினார்கள். களத்தில் நல்ல ஆற்றல் மற்றும் அணுகுமுறையை விரும்பினோம், அது கிடைத்தது. சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி விளையாட எங்கள் அணியில் இருந்து சிலபல வீரர்கள் இங்கு வந்திருந்தார்கள்”

இதையும் படிங்க : வெறும் 4.3 ஓவர்.. பை பை சொன்ன இந்தியா.. டி20 வரலாற்றில் சாதனை வெற்றி.. யுஏஇ சொந்த மண்ணில் சோக தோல்வி

“விக்கெட் நன்றாக இருந்தாலும் கூட மெதுவாக இருக்கிறது. தற்போது இங்கு வெயில் மிக அதிகமாக அடிக்கிறது. இதன் காரணமாக சுழல் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய உதவி இருக்கிறது. பந்து வீச்சில் குல்தீப், சிவம் துபே மற்றும் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டார்கள். அபிஷேக் ஷர்மாவை பொருத்தவரையில் துரத்துவது 200 ரன் அல்லது 50 ரன் என்பது பற்றி கவலை கிடையாது. இலக்கு எதுவாக இருந்தாலும் அவர் ஒரு தொனியை அமைக்கிறார். அவர் தற்போது உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இந்த வடிவத்தில் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -