இன்று துவங்கும் ஆசிய கோப்பை தொடரில் நாளை இந்தியா மற்றும் யுஏஇ அணி மோதிக் கொள்ளும் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எப்படி அமையலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய அணி தற்போது ஆசிய சாம்பியன் மற்றும் உலக சாம்பியனாக டி20 கிரிக்கெட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடர் t20 வடிவத்தில் நடைபெறுவதால், இந்தத் தொடரை கைப்பற்றிய ஆக வேண்டிய கட்டாயம் அதிகரித்து இருக்கிறது.
துபாய் கண்டிஷன்
தற்பொழுது யுஏஇல் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்து வருகின்ற காரணத்தினால் ஆடுகளங்கள் நன்கு காய்ந்து சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே ஒவ்வொரு அடியிலும் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்களோடு சேர்த்து நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு அணிகளும் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடிவிட்டன.
இதன் காரணமாக இந்திய அணியிலும் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் என மூன்று பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த மும்முனை சுழல் தாக்குதல் துபாய் கண்டிஷனுக்கு முக்கியம். இதன் காரணமாக பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா உடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிவம் துபே விளையாடியாக வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. கம்பீர் இந்த முறையில் செல்வார் என்று எதிர்பார்க்கவும் படுகிறது.
பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும்?
தற்போது மூன்றாவது இடத்தில் விளையாடி வரும் திலக் வர்மா இடத்தில் சஞ்சு சாம்சன் இடம்பெறும் பொழுது, இன்னொரு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா விளையாட வேண்டிய தேவை வராது. எனவே அவருடைய இடத்தில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக சிவம் துபேவை விளையாட வைக்கலாம். அவரை எட்டாவது இடத்தில் கூட பேட்டிங் செய்ய வைக்கலாம். பேட்டிங் நீளத்தை 8 வரையில் அதிகரித்துக் கொள்ளலாம். மேலும் அபிஷேக் ஷர்மா பகுதி நேர சுழல் பந்துவீச்சாளராகவும் செயல்படுவார்.
இதையும் படிங்க : ரோஹித் டி20 உலகக் கோப்பையை வாங்கினப்போ.. யூஸ் பண்ண அந்த தந்திரத்தை.. கம்பீர் இப்போ மிஸ் பண்ணுறாரு – முகமது கைஃப்
இந்திய பிளேயிங் XI : அபிஷேக் ஷர்மா, கில், சஞ்சு சாம்சன் சூரியகுமார் யாதவ், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.






