இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மந்தம்.. காரணம் அரசியல் கிடையாது.. முட்டாள்தனம் தான்!

0
70

2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்பனையாகவில்லை. இந்த இரு அணிகளும் செப்டம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவிருக்கின்றன.இந்தப் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என கருதப்பட்ட நிலையில், டிக்கெட் விற்பனை மந்தமாக உள்ளது..

இதற்கு முக்கிய காரணம், நிர்வாகிகள் அறிமுகப்படுத்திய ‘பேக்கேஜ் முறை’ ஆகும். முந்தைய தொடர்களில் ரசிகர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் டிக்கெட்டுகளை வாங்க முடிந்த நிலையில், இந்த ஆண்டு அவர்கள் ஏழு போட்டிகளுக்கான முழு பேக்கேஜையும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

ரசிகர்கள் ஏமாற்றம்:

‘பேக்கேஜ் முறை’ அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு அப்பால் மற்ற போட்டிகளையும் ஊக்குவிப்பதாகும். இருப்பினும், அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதால், இந்த முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும், உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், இந்தியா, பாக். போட்டிக்கான டிக்கெட்டுகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பேக்கேஜில் சூப்பர் ஃபோர் மற்றும் இறுதிப் போட்டிகள் இடம்பெறாதது குறித்தும் பலர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். அவை இடம்பெற்றிருந்தால் பேக்கேஜ் வாங்குவது அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

போட்டி நடைபெறும்:

இதனிடையே, இரு நாகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக, இந்தியா, பாகிஸ்தாக்ன போட்டி நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த போட்டியை கைவிட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இந்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய பின்னர் இந்தப் போட்டி உறுதியானது. இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காது. ஆனால் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கும் சர்வதேச நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்கும் என்று அரசு தெரிவித்தது.

இதையும் படிங்க: கோலி ரவி சாஸ்திரியை கில் ஈர்த்தது இப்படிதான்.. அப்ப தோனியும் இருந்தார்.. அங்கேயே முடிவாயிடுச்சு – சஞ்சய் பாங்கர் பேட்டி

தற்போதைய நிலவரப்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை ஓமன் மற்றும் தொடர் நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் குரூப் A-வில் இடம்பெற்றுள்ளன. குரூப் B-யில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் உள்ளன. இந்தத் தொடர் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் அபுதாபியிலுள்ள ஜாயத் கிரிக்கெட் மைதானம் ஆகிய இரு இடங்களில் நடைபெறவுள்ளது.

- Advertisement -