இங்கிலாந்து அணிக்கு எதிரான பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது.
தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றிருக்க இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
தென் ஆப்பிரிக்கா அபாரம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு மார்க்ரம் 49, ரியால் ரிக்கல்டன் 35, ஸ்டப்ஸ் 58, பிரீட்ஸ்கி 85, பிரிவிஸ் 42 மற்றும் கார்பின் போஸ் 32* என சீரான பங்களிப்பை கொடுத்தார்கள்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மீண்டும் வந்த ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
பரபரப்பான போட்டியின் முடிவு
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 61, ஜேக்கப் பெத்தேல் 58, ஹாரி புரூக் 38, ஜோஸ் பட்லர் 61, வில் ஜேக்ஸ் 31 என சீராக ரன்கள் எடுக்க போட்டி இங்கிலாந்து பக்கம் இருந்தது. இந்த நிலையில் திடீரென விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இலக்க ஆரம்பித்தது.
இதையும் படிங்க : சில பேருக்குதான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்.. ஓய்வு பெறும் முன் விரக்தி அடைந்த அமித் மிஸ்ரா
இந்த நிலையில் இங்கிலாந்து அணி கடைசி ஓவரில் ஒரு விக்கெட் கைவசம் இருக்க வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஒருமுனையில் நின்ற ஜோப்ரா ஆர்ச்சர் போராட 10 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் மூன்று போட்டியில் இரண்டு போட்டிகளை வென்றதால் தென் ஆப்பிரிக்கா அணி தொடரை வென்றது.






