இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் மேத்யூ பிரிட்ஸ்கி 54 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்திருக்கிறார்.
தற்போது தென் ஆப்பிரிக்க அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சரிவில் மீண்ட சவுத் ஆப்பிரிக்கா
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுத் ஆப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் 49 ரன்கள், ரியான் ரிக்கல்ட்டன் 35 ரன்கள், கேப்டன் டெம்பா பவுமா 3 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதனால் தென் ஆப்பிரிக்க அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜோடி சேர்ந்த மேத்யூ பிரிட்ஸ்கி மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து முதலில் பொறுமையாக விளையாட ஆரம்பித்து பிறகு அதிரடியை காட்டி, இருவருமே அரை சதத்தை கடந்தார்கள். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது.
மாபெரும் உலகச் சாதனை
இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததின் மூலமாக மேத்யூ பிரிட்ஸ்கி தனது முதல் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும், ஒவ்வொரு போட்டியிலும் 50+ ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார். 54 வருட ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஐந்து போட்டிகளில் ஐந்து 50+ ஸ்கோர் எடுத்த முதல் வீரர் என்ற மெகா உலக சாதனையை படைத்திருக்கிறார். இறுதியாக 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ருதுராஜ்.. செலக்டர்களுக்கு செக் வைத்த சிஎஸ்கே சிங்கம்.. மாஸ் சம்பவம்
நியூசிலாந்து அணிக்கு எதிராக தனது அறிமுக ஒருநாள் போட்டியில் சதமும், அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரைசதமும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இரண்டு அரை சதங்களும், தற்பொழுது இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு அரை சதங்களும் எடுத்து இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனைகள் படைத்துள்ள சச்சின் மற்றும் விராட் கோலிக்கு கூட இந்த மெகா சாதனையை செய்யும் வாய்ப்பு அமையவில்லை.






