இவர்கள் செஞ்ச வேலைக்கு.. நடுவர் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருக்கணும் – இங்கிலாந்து முன்னாள் வீரர்

0
31

சமீபத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது முடிவுற்றது.

இந்த சூழ்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேவிட் லாயிட் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

சுப்மான் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கில் மற்றும் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராலி ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது அனைவரும் அறிந்த விஷயமாகும். இங்கிலாந்து வீரர் நேரத்தை கடத்தியதால் கோவம் அடைந்த இந்திய கேப்டன் கில் ஆக்ரோஷமான தோணியில் இங்கிலாந்து வீரரிடம் வாக்குவாதம் செய்தது பேசு பொருளாக மாறியது.

இருப்பினும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி சரிசமமாக 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில் இது குறித்த தற்போது பேசி இருக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட், அந்த இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட்டு இருக்க வேண்டும் என்று சில யோசனைகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வீரர்களை வருத்தப்படுத்தாதீர்கள். நான் அப்போது அந்த தேர்வு குழுவில் இருந்தேன். நான் எப்போதும் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகளை பற்றி ஏற்கனவே பேசி இருக்கிறேன். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது நடந்த சம்பவத்திற்கு இரண்டு வீரர்களுக்கும் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டைகளை கொடுத்து வெளியேற்றி இருக்க வேண்டும். அது ஐந்து நாள் ஆட்டம் அல்லது 4 நாள் ஆட்டம் என்று எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியான முடிவை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:இங்கிலாந்துல கில் செஞ்ச தப்ப.. ஆசிய கோப்பைல சூரியகுமார் செய்யக்கூடாது – மதன்லால் வலியுறுத்தல்

மேலும் வீரர்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சிக்க வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார். கால்பந்து விளையாட்டில் வீரர்கள் வரம்பு மீறும்போது பயன்படுத்தப்படும் சிவப்பு அல்லது மஞ்சள் நிற அட்டைகளை கிரிக்கெட்டிலும் பயன்படுத்த வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பேசியிருக்கிறார்.

- Advertisement -