அந்த காயம் ஆறாது.. 2027 உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மாவின் பிளான் இதுதான் – ரகசியம் உடைத்த இர்பான் பதான்

0
59

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2027ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பைக்கு என இரண்டு தொடர்களுக்கும் மிக தீவிரமான முறையில் இப்போது இருந்தே தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய ஒரு நாள் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக டி 20 வடிவ தொடரில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதற்குப் பிறகு அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி களம் இறங்க உள்ளது.

மறுமுனையில் இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த வருடம் டி20 உலக கோப்பையை வென்று கொடுத்துவிட்டு டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா விரைவாக ஒரு நாள் தொடரிலும் ஓய்வு பெறுவார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இது குறித்த இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோகித் சர்மாவின் எதிர்கால திட்டங்கள் குறித்து நான் நீண்ட நேரம் பேசினேன். அவர் தொடர்ந்து விளையாடுவதில் ஆர்வமாக உள்ளார். அவரைப் போன்ற சிறப்பான வீரர்கள் தொடர்ந்து விளையாடுவதில் ஆர்வமாக உள்ளார்கள். ரோகித் சர்மா ஒரு அற்புதமான தலைவராகவும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஒரு சிறந்த வீரராகவும் இருந்து வருகிறார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் துயரத்தை நாம் அறிவோம்.

இதையும் படிங்க:மிட்சல் ஸ்டார்க் டி20 கிரிக்கெட்டில் திடீர் ஓய்வு.. பின்னணியில் ரோகித் சர்மா.. உண்மை காரணங்கள் என்ன?

அதில் அதிக உணர்ச்சிகளை பெற்றிருந்தவர் ரோகித் சர்மா. அதனால் அவர் இன்னும் தொடர்ந்து முன்னேறி தனது முத்திரையை பதிக்க விரும்புகிறார். வீரர்கள் சிறந்த உடற் தகுதியை பெறும்போது வயது ஒரு பொருட்டல்ல. 2027 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு முன்னதாக வீரர்கள் சரியான விளையாட்டு நேரத்தை பெற்றிருக்கிறார்களா? என்பதை கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். ரோஹித், விராட் அல்லது சாமி போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடுவதை எப்போதும் உந்துதலாக பெற்றிருக்கிறார்கள். உடற்தகுதியோடு குறைந்த விளையாட்டு நேரத்தை சமாளிக்கவும் முடிந்தால் ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -