புதிய பிரான்கோ உடல் தகுதி டெஸ்ட் கொண்டு வந்ததே.. ரோகித்த துரத்ததான்..பிளான் போட்டது இவர்தான் – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

0
95
Rohit

இந்திய அணிக்கு புதிய பிட்னஸ் டெஸ்ட் பிரான்கோ அறிமுகப்படுத்தப்பட்டது ஒருநாள் அணியில் இருந்து ரோஹித் சர்மாவை வெளியேற்றவே என மனோஜ் திவாரி குற்றம் சாட்டி இருக்கிறார்.

இதற்கு முன்பாக இந்திய அணியில் யோயோ டெஸ்ட் முறை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து ரக்பி விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பிரான்கோடெஸ்ட் உடல் தகுதி சோதனை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இது மிகவும் கடினமான ஒரு உடல் தகுதி சோதனை முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு எதிரானது

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது “2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை திட்டங்களில் விராட் கோலியை விலக்கி வைப்பது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் ரோகித் சர்மாவை திட்டங்களில் இருந்து வெளியே வைக்கப் போகிறார்கள் என்று தோன்றுகிறது. இந்த சந்தேகத்திற்கு காரணம் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் பிரான்கோ உடல் தகுதி சோதனை”

“நான் எப்பொழுதும் இந்திய கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது என்று மிகவும் கூர்ந்து கவனிக்க கூடியவன். சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிரான்கோ டெஸ்ட் முறை ரோகித் சர்மா போன்ற வீரர்களுக்கு எதிரானது என்று நான் நினைக்கிறேன். எதிர்காலத்தில் ரோகித் சர்மா அணிகள் இடம் பெறக் கூடாது என்று நினைக்கும் ஒருவர் இதைச் செய்திருக்கிறார்”

- Advertisement -

ஒரே ஒரு கேள்வி

“ஆனால் ஒரு கேள்வி என்னவென்றால், இப்போது எதற்கு அவசரமாக இந்த டெஸ்ட் முறையை கொண்டு வர வேண்டும்? ஏன் உங்களுடைய தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த போதே இந்த டெஸ்ட் முறையை கொண்டு வரவில்லை? இது யாருடைய யோசனை? இதை அணிக்கு அறிமுகப்படுத்தியது யார்? மேலும் சில நாட்களுக்கு முன்பு இந்த டெஸ்ட்டை அமல்படுத்தியது யார்?”

இதையும் படிங்க : பிசிசிஐ பண்ணிட்டு இருக்கிறது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது இல்ல.. இந்த 3 பேர் செஞ்ச பாவம் என்ன? – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“எனவே பாருங்கள் என்னுடைய இந்த கேள்விகளுக்கு எங்கும் பதில் இருக்காது. அதே சமயத்தில் ரோகித் சர்மா தனது உடல் தகுதியை அதிகரிக்க வேலை செய்யாவிட்டால் நிச்சயம் அவரால் தகுதி பெற முடியாது. இந்த டெஸ்ட் அவருக்கு மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. மேலும் இந்த டெஸ்ட் மூலம் ரோஹித் சர்மா வெளியேற்றப்பட்டு விடுவார் என்று நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -