பிசிசிஐ பண்ணிட்டு இருக்கிறது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது இல்ல.. இந்த 3 பேர் செஞ்ச பாவம் என்ன? – ஸ்ரீகாந்த் விமர்சனம்

0
26
Gambhir

இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வழங்கிய ஜாம்பவான் வீரர்களுக்கு தற்போது பிசிசிஐ நல்ல முறையில் நடந்து கொள்ளவில்லை எனவும், இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதில்லை எனவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பெரிய வீரர்களான விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோர் ஓய்வு பெற்று இருக்கிறார்கள். இவர்கள் மூவருக்கும் சிறப்பான முறையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வழியனுப்புதலை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதில்லை

இந்த மூவரில் மிகக் கடினமான டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விராட் கோலி மற்றும் புஜாரா இருவரும் இந்திய அணிக்காக 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். இந்த இலக்கத்தை தொட்ட வீரர்களுக்கு அந்தந்த கிரிக்கெட் வாரியம் சிறந்த முறையில் வழியனுப்புதலை செய்ய வேண்டியது கடமையான மரியாதையாக இருக்கிறது. இதை பிசிசிஐ செய்யவில்லை.

இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “நீங்கள் உங்கள் நாட்டிற்காக 100 டிரஸ்ட் போட்டிகளில் விளையாடினால் நீங்கள் சிறந்த வீரராக இருக்க வேண்டும். எனவே உங்களுக்கு சிறந்த முறையில் ஃபேர்வெல் கொடுக்கப்பட வேண்டும். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்றபோது பெரிய தகவல் தொடர்பு இடைவெளி இருந்தது என்று நினைக்கிறேன். பிசிசிஐ இவர்களிடம் பேசி இருக்க வேண்டும். இப்படி செய்யாதது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது”

- Advertisement -

விராட் மிகப் பெரியவர்

“கடைசியில் விராட் கோலியின் ஓய்வும் இப்படியே நடந்தது. விராட் கோலி இதைவிட ஒரு சிறந்த வழி அனுப்புவதற்கு தகுதியானவர். அவருக்கு இன்னும் இரண்டு வருடம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் மீதம் இருந்தது. ஆனால் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் நடைபெற்ற காரணத்தினால் அவர் குறித்த பேச்சு நிறுத்தப்பட்டு விட்டது. இருந்தாலும் விராட் கோலி போன்ற ஒரு வீரரை திரும்ப பெறுவது இந்திய அணிக்கு சில காலத்திற்கும் மிகவும் கடினம்”

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்டின் புதிய உடல்தகுதி தேர்வு மோசமானது.. நுரையீரலை எரித்து விடும் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

“புஜாரா இந்திய அணிக்காக விளையாடி சில காலம் ஆகியிருக்கிறது. இருந்தாலும் இவர்களை அனுப்பி வைப்பது தொடர்பாக இவர்களிடம் சரியான முறையில் பேசி இருக்க வேண்டும். இது வீரர்கள், பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு மூவரின் ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை சார்ந்த விஷயமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -