இன்று ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்து ஒரு முக்கியமான முடிவை எடுத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் என்னவாக இருக்கும்? என பல யூகங்கள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது.
என்ன வாய்ப்புகள் உள்ளது?
தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஒரு இந்திய வீரரால் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட முடியாது. அதே சமயத்தில் இது இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளை கட்டுப்படுத்தாது. அவர்கள் உள்நாட்டில் டி20 தொடரில் விளையாடினாலும் வெளிநாட்டில் நடக்கும் டி20 தொடரிலும் விளையாடலாம்.
இந்த வகையில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் வெளியில் நடக்கும் டி20 தொடர்களில் விளையாட முடியும். அத்துடன் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக ஏதாவது ஒரு அணிக்கு வர முடியும். இந்த வகையில் தற்போது அவருக்கு பல வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.
வெளியான புதிய திருப்பம்
இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் செய்திகள் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் நூறு பந்து தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பங்கேற்று விளையாடுவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. எனவே உடனடியாக அவர் அடுத்த வருடம் இங்கிலாந்தில் விளையாடுவதை நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க : நான் 150 கிமீ வீசியும் கூட.. இந்த 3 இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டி விட்டுட்டாங்க – மார்க் வுட் பேட்டி
மேலும் இதைத் தொடர்ந்து அவர் தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் விளையாடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இந்த இரண்டு டி20 தொடர்கள்தான் வெளியில் பிரபலமாக இருக்கின்றன. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒன்றுக்கு பயிற்சியாளர் பொறுப்பில் வருவதற்கும் அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன.






