இங்கி டி20 ODI தொடர்கள்.. தெ.ஆ அணிகள் அறிவிப்பு.. 2 ஸ்டார் வீரர்கள் வருகை.. 2 WCக்கும் பக்கா ஸ்கெட்ச்

0
141
SA

தென் ஆப்பிரிக்க அணி தங்களது சொந்த மண்ணில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. தற்போது இந்த தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து வெள்ளை பந்து தொடர்களில் பங்கேற்று வருகிறது. தற்போது வெள்ளை பந்து தொடர்களில் விளையாட ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணி, அதற்கு அடுத்து சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெள்ளை பந்து தொடர்களில் விளையாடுகிறது.

- Advertisement -

தொடர் அட்டவணை

இரு அணிகளுக்கும் இடையே தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியா இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை, அதற்கு அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தென் ஆப்பிரிக்கா அணியின் நிர்வாகம் சிறந்த திட்டமிடலை செய்து வருகிறது.

இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 2, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

முழு பலத்தோடு களமிறங்கல்

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு நட்சத்திர வீரர்கள் மார்க்கோ யான்சன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் அணிக்கு திரும்பியிருக்கிறார்கள். மேலும் முன்னணி பந்துவீச்சாளர் ரபடாவுக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை. தென் ஆப்பிரிக்கா அணி தங்களது முழு பலத்தோடு இரண்டு தொடர்களிலும் களமிறங்குகிறது.

தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணி:
புரோட்டியாஸ் ஒருநாள் அணி: டெம்பா பவுமா (கே), கார்பின் போஷ், மேத்யூ பிரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், நந்த்ரே பர்கர், டோனி டி சோர்ஸி, கேஷவ் மகாராஜ், க்வேனா மபாகா, எய்டன் மார்க்ராம், வியான் முல்டர், செனுரான் முத்துசாமி, லுங்கி நிகிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

இதையும் படிங்க : அகர்கர் செஞ்சது முட்டாள்தனமானது.. கில் விஷயம் 10 வருஷமா நடக்குது.. இன்னும் திருந்தல – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

தென் ஆப்பிரிக்க டி20 அணி: எய்டன் மார்க்ரம் (சி), கார்பின் போஷ், டெவால்ட் ப்ரீவிஸ், டோனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், குவேனா மபாகா, டேவிட் மில்லர், செனுரன் முத்துசாமி, லுங்கி என்கிடி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ரபாடா, ரியான் ரிக்கல்டன், ஸ்டப்ஸ் மற்றும் லிசார்ட் வில்லியப்ஸ்,

- Advertisement -