உன் கோச்சை, என் பக்கம் வர கூடாதுனு சொல்லி வை.. சேவாக் செய்த தக் லைஃப் சம்பவம்! என்ன நடந்தது?

0
93

இந்திய கிரிக்கெட் அணியில் இருண்ட காலம் என்றால் அது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலம் மட்டும்தான். 2005 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட் பதவி விலகிய நிலையில் கிரேக் சாப்பல் புதிய பயிற்சியாளராக வந்தார்.

அவர் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். அது சர்ச்சை ஏற்படுத்தியது. 2007 உலக கோப்பையில் கிரேக் சாப்பல் பல சீனியர் வீரர்கள் அணியில் இருக்கக் கூடாது என வெளிப்படையாகவே அறிவித்திருந்திருக்கிறார். இந்த நிலையில்  கிரேக் சேப்பலுக்கும் தமக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சேவாக் தற்போது தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

வாக்குவாதத்தில் ஈடுபட்டோம்:

இது குறித்து பேசிய அவர், ஒரு முறை கிரேக் சேப்பல் பேசியது என்னை மிகவும் காயப்படுத்தியது. சர்வதேச கிரிக்கெட்டில் சில போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை. அப்போது கிரேக் சேப்பல், என்னை அழைத்து உன்னுடைய காலை நீ சரியாக நகர்த்தி விளையாடவில்லை என்றால், சர்வதேச கிரிக்கெட்டில் உன்னால் ரன் அடிக்க முடியாது என்று கூறினார்.

அதற்கு நான் நான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கின்றேன். என்னுடைய சராசரி 50 க்கு மேல் உள்ளது. இதனால் நான் காலை நகர்த்துகிறேனோ, இல்லையோ எனக்கு எப்படி ரன் சேர்ப்பது என்று தெரியும் என்று கூறினேன். இதனை அடுத்து கிரேக் சேப்பல், என்னிடம் மிகப்பெரிய வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

- Advertisement -

சேவாக்கின் தக் லைஃப் சம்பவம்:

அப்போது கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் தலையிட்டு எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார். அடுத்த நாள் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாட செல்லும்போது கிரேக் சேப்பல், நீ இன்று ரன் எடுக்க வேண்டும். இல்லையென்றால் நான் அணியை விட்டு நீக்கிவிடுவேன் என்று கூறினார். அப்போது உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சென்றேன்.

யோசித்துப் பாருங்கள் ஒரு போட்டியில் பேட்டிங் செய்யும்போது இந்த வார்த்தையை கேட்டு தான் நான் களத்திற்கு களமிறங்கினேன். நான் பந்து சந்திக்கும்போது அடித்து நொறுக்கினேன். மதியநேர உணவு இடைவெளிக்கு முன்பு 99 ரன்கள் சேர்த்தேன். அப்போது ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தவுடன் டிராவிட்டை பார்த்து உன்னுடைய பயிற்சியாளரை என் பக்கம் வர வேண்டாம் என சொல்லிவிடு என்று கூறிவிட்டு மீண்டும் பேட்டிங் செய்ய சென்றேன்.

இதையும் படிங்க: இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்க்க மாட்டேன்.. இது என்ன பெரிய அநியாயமா இருக்கு – மனோஜ் திவாரி கொதிப்பு

அந்தப் போட்டியில் நான் 184 ரன்கள் அடித்தேன். அதன்பின் மீண்டும் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்து நான் காலை நகர்த்துகிறேனோ இல்லையோ எனக்கு எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்று தெரியும் என சேப்பலை பார்த்து கூறினேன் என்று சேவாக் தெரிவித்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேவாக் 104 போட்டியில் விளையாடி 8586 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 49.3  ஆகும். இதில் 23 சதமும், 32 அரை சதமும் அடங்கும். இந்திய கிரிக்கெட் வீரர்களே இரண்டு முச்சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை சேவாக் படைத்திருக்கிறார்.

- Advertisement -