சிங்கம் மாதிரிதான் இருப்பேன்.. ஐபிஎல்ல எப்ப ஓய்வு விராட் பையா என்கிட்ட சொல்லிட்டாரு – ஆர்சிபி வீரர் பேச்சு

0
34
Rcb

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் விராட் கோலி உடன் பழகுவதற்கு அதிக வாய்ப்பு கிடைத்த ஸ்வஸ்திக் சிகாரா விராட் கோலி எப்போது ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என்று கூறியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான ஸ்வஸ்திக் சிகாரா ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக இந்த ஆண்டு வாங்கப்பட்டார். அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

விராட் கோலி உடனான நட்பு

இந்த நிலையில் பௌண்டரி எல்லையில் விராட் கோலிக்கு தண்ணீர் மற்றும் டவல் கொடுப்பது என முழுமையாக அவரை கவனித்துக் கொள்வதற்காக ஸ்வஸ்திக் சிகாராவை ஆர்சிபி அணி நிர்வாகம் நியமித்தது. இதன் காரணமாக அவருக்கு விராட் கோலி உடன் நெருங்கி பழகும் வாய்ப்பும் அமைந்தது.

ஐபிஎல் தொடரில் ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே பவுண்டரி எல்லையில் விராட் கோலி இந்த இளம் வீரருடன் சிறிது நிறைய பேசிக் கொண்டிருப்பார். மேலும் ஓய்வறையிலும் விராட் கோலி உடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்புகள் நிறைய அமைந்திருக்கிறது. அப்போது விராட் கோலி தன்னுடைய ஐபிஎல் ஓய்வு வரையில் இந்த இளம் வீரரிடம் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

எப்போது ஓய்வு

இதுகுறித்து ஸ்வஸ்திக் சிகாரா பேசும்பொழுது ” நான் ஆர்சிபி அணியில் அவருடன் பழகிய பொழுது, அவர் ஐபிஎல் தொடரில் எப்பொழுது ஓய்வு பெறுவார் என்பது வரை என்னிடம் கூறியிருக்கிறார். நான் இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது ‘ நான் முழுமையாக ஃபிட்டாக இருக்கும் வரையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்’ என்று கூறினார்”

இதையும் படிங்க : ஆசியக் கோப்பை பங்களாதேஷ் அணி அறிவிப்பு.. 2 மெகா வீரர்கள் நீக்கம்.. மோசமான தேர்வு என ரசிகர்கள் விமர்சனம்

“மேலும் விராட் கோலி பைய்யா ‘நான் ஒருபோதும் இம்பாக்ட் பிளேயராக விளையாட மாட்டேன். நான் ஒரு சிங்கம் போலதான் விளையாடுவேன். நான் இருபது ஓவர் பீல்டிங் செய்து விட்டு பின்பு பேட்டிங் செய்ய செல்வேன். இது முடியாமல் இம்பேக்ட் பிளேயராக விளையாட வேண்டிய நிலை வந்தால் நான் கிரிக்கெட்டை விட்டு போய் விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -