ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா இழந்த நிலையில், ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்துவிட்டது.
மெக்காய் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய தென்னாபிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ரியான் ரிக்கால்டன் 8 ரன்களிலும், ஏய்டன் மார்க்கரம் ஆகியோர் ஆட்டம் இழந்தனர்.
தென்னாப்பிரிக்கா ரன் குவிப்பு:
டோனி டி சொர்ஷி மற்றும் மேத்யூ பிரிட்ஸ்கி பொறுப்பான ஆட்டத்தை விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரி விலிருந்து மீட்டனர். ஐந்து பவுண்டரிகளை அடித்த டோனி டி சோர்ஸி 38 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய மேத்யூ பீரிட்ஸ்கி தன்னுடைய முதல் நான்கு போட்டிகளில் அரை சதம் விளாசி உலக சாதனையை சமன் செய்தார்.
இதேபோன்று அபாரமாக விளையாடி 87 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 88 ரன்களில் வெளியேறினார். இந்த சூழலில் சிஎஸ்கே வீரர் பிரவீஸ்,மீண்டும் ஒரு நாள் போட்டிகளில் சொதப்பினார். ஐந்து பந்துகளை எதிர் கொண்ட அவர் 1 ரன் மட்டும்தான் சேர்த்தார். மேலும் இறுதியில் வியான் முல்டர் 26 ரன்களிலும் கேசவ் மஹராஜ் 22 ரன்ளும் எடுக்க தென்னாப்பிரிக்கா அணி 49 புள்ளி ஓவரில் 277 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது.
தொடரை இழந்த ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஆடம் சாம்பா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை அடுத்து 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 6 ரன்களிலும், மிட்செல் மார்ஸ் 18 ரன்களிலும் மார்னஸ் லாபஸ்சேன் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 38 ரன்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை தடுமாறியபோது கேமரான் கிரீன் மற்றும் ஜோஸ் இங்க்லீஷ் அணியை சரிவிலிருந்து மீட்டது கேமரன் கிரீன் 35 ரன்கள் வெளியேற அலெக்ஸ் கெரி 13 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதையும் படிங்க: இந்தியா தோல்வி.. ஆஸி பிளேயர்களுக்கு ஸ்பின் விளையாட ஐடியா கொடுத்த அஸ்வின்.. டிராவிட் வெளியிட்ட சுவாரசிய விசயம்
சிறப்பாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஷ் 74 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். எனினும் அதன் பின் களம் இறங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 37.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணில் 193 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சு தரப்பில் லுங்கி நிகிடி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற ஐந்து ஒருநாள் தொடரிலும் தென்னாப்பிரிக்கா அணியே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.






