ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்த பதவியும் கிடையாது.. ODI கேப்டன் இவர்தான்.. பிசிசிஐ செயலாளர் திட்டவட்டம்

0
164
BCCI

ஒருநாள் இந்திய அணிக்கு எதிர்காலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக கொண்டுவர பிசிசிஐ திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகிறது. இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் இதை மறுத்திருக்கிறார்.

தற்போது இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்படாத ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒரு நாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட பிசிசிஐ ஆலோசித்து வருவதாக பரபரப்பான செய்திகள் வெளியாகியது. தற்போது இது வதந்தி என தெரிய வருகிறது.

- Advertisement -

பரவிய செய்திக்கு மறுப்பு

தற்போது இந்திய அணி பல போட்டிகளில் தொடர்ந்து விளையாடுகின்ற காரணத்தினால் மூன்று வடிவத்திற்கும் ஒரே கேப்டன் இருப்பது கடினம் என்பதால், குறைபாடு போட்டிகள் விளையாடப்படும் ஒருநாள் வடிவத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்து கில்லின் பணிச் சுமையை குறைக்க பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் வந்தன.

தற்போது இது குறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் பைக்கியா கூறும்பொழுது “இப்படி ஒரு செய்தி எனக்கும் வெளியில் பரவுவதாக வந்தது. ஆனால் அப்படி எந்த விவாதங்களையும் நாங்கள் நடத்தவில்லை” என்று கூறி மறுத்துவிட்டார்.

- Advertisement -

யார் கேப்டன்?

மேலும் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஓய்வு பெறுவது தொடர்பாக எந்த விவாதங்களும் நடத்தப்படவில்லை என்று தெரிய வருகிறது. இதன் காரணமாக தற்போதைக்கு அவரே கேப்டனாக தொடர்வார் என்றும் தெரிகிறது. அவருக்குப் பிறகு கில் கேப்டனாக வருவார் என்றும் பிசிசிஐ வட்டாரத்தில் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : தோனியா.? ரோஹித்தா.? இந்திய கேப்டன்களில் நான் ரசித்த நபர் இவர்தான் – ராகுல் டிராவிட் ஓபன் டாக்

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி கூறும் பொழுது “தற்போது கில்லின் ஒருநாள் ரன் சராசரி 59 என்று இருக்கிறது. அவர் இந்த வடிவத்தில் தொடர்ந்து மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் தற்போது அவர் துணை கேப்டன் ஆகவும் இருந்து வருகிறார். எனவே ரோகித் சர்மாவுக்கு பிறகு அவரே கேப்டன் ஆக கொண்டுவரப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -