கம்பீர் வைத்திருக்கும் 8வது இடம் மெகா டிவிஸ்ட்.. மீண்டும் பரிதாபமாக சிக்கும் இந்திய வீரர் – முழு அலசல்

0
74
Gambhir

தற்போது ஆசியக் கோப்பை இந்திய பிளேயிங் லெவனில் கௌதம் கம்பீர் அதிரடியான சில மாற்றங்களை செய்ய இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக 8வது இடம் யாருக்கு என்பது சுவாரஸ்யமானதாக மாறுகிறது.

நேற்று இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டது. இதில் சில வீரர்களை தேர்வு செய்யாதது சர்ச்சையாக மாறி இருந்த போதும், அறிவிக்கப்பட்ட அணி வலிமையானதாகவே இருக்கிறது.

- Advertisement -

பேட்டிங் வரிசையில் ஏற்படும் மாற்றங்கள்

கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் விளையாடாத காரணத்தினால் மட்டுமே அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் வாய்ப்பு பெற்றார்கள் என்று நேற்று அஜித் அகர்கர் மிகவும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதன் காரணமாக துவக்க ஆட்டக்காரராக முதல் வாய்ப்பு தில்லுக்கு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இடதுகை வலதுகை காம்பினேஷன்காக அபிஷேக் ஷர்மா விளையாடுவார். சஞ்சு சாம்சன் இடம் கடினம் ஆகிவிடும்.

இந்த வகையில் அபிஷேக் ஷர்மா, கில், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜிதேஷ் சர்மா இல்லை சஞ்சு சாம்சன், அக்சர் படேல் என முதல் ஏழு இடங்கள் உறுதியாக இவர்களை வைத்து நிரப்பப்படும். இந்த நிலையில் எட்டாவது இடம் தான் சுவாரஸ்யமானதாக மாறுகிறது.

- Advertisement -

8வது இடத்தின் சுவாரசியம்

கம்பீர் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு இந்திய அணியில் எல்லா வடிவங்களிலும் பேட்டிங் வரிசை 8 வரையில் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறார். இந்த வகையில் பார்க்கும் பொழுது எட்டாவது இடத்தை ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஆல்ரவுண்டருக்கு கொடுப்பார். இதற்கு சிவம் துபே மற்றும் ரிங்கு சிங் இருவர் இருக்கிறார்கள்.

மேலும் எட்டாவது இடத்தில் சிவம் துபேவை வைப்பதற்கு பதிலாக பினிஷிங் செய்யும் ரிங்கு சிங்கை வைக்கும் பொழுது, ஆறாவது பந்துவீச்சாளராக அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. கம்பீர் இந்த வழியில் செல்ல விரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பைக்கு இந்தியா வந்தா என்ன வரலைனா என்ன?.. எங்களுக்கும் அது இருக்கு – வாசிம் அக்ரம் பேட்டி

இதற்கு அடுத்து ஒன்பதாவது இடத்தை குல்தீப் யாதவை விட வருண் சக்கரவர்த்திக்கு கொடுக்கவே வாய்ப்பு அதிகம். அடுத்த இரண்டு இடங்களில் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் வருவார்கள். எனவே இந்த முறையும் இங்கிலாந்து தொடர் போலவே குல்தீப் யாதவ் வெளியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -