296 ரன்.. கேசவ் மகாராஜ் செய்த அடுத்தடுத்த 5 மேஜிக்.. கொத்தாக விழுந்த ஆஸி.. தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
688
Maharaj

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

தென் ஆப்பிரிக்க அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா பொறுப்பான பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் எய்டன் மார்க்ரம் 81 பந்துகளில் 82 ரன்கள், ரியான் ரிக்கல்ட்டன் 43 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து பிரீட்ஸ்கீ 56 பந்தில் 57 ரன்கள், கேப்டன் டெம்பா பவுமா 74 பந்தில் 65 ரன்கள் எடுக்க தென் ஆபிரிக்கா அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் டிராவிஸ் ஹெட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

கேசவ் மகாராஜ் அசத்தல்

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் மிட்சல் மார்ஸ் 96 பந்துகளில் இறுதிவரை போராடி 88 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஹெட் 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ் ஜெய்ஸ்வாலுக்கு ஏன் வாய்ப்பு தரலை.. கில்லுக்கு வாய்ப்பு தந்தது ஏன்? – அகர்கர் விளக்கம்

இதற்கு அடுத்து மார்னஸ் லபுசேன் 1, கேமரூன் கிரீன் 3, ஜோஸ் இங்லீஷ் 5, அலெக்ஸ் கேரி 0, ஆரோன் ஹார்டி 4 ரன்கள் என ஐந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கேசவ் மஹாராஜா அடுத்தடுத்து தொடர்ந்து கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியை சரித்து விட்டார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டும் எடுத்து 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -