2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிடை அனைத்து ஐபிஎல் அணிகளும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகவும், ஆனால் அவரது பரிந்துரை புறக்கணிக்கப்பட்டதாகவும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்தார். 2024இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய டிம் டேவிட், ஐந்து முறை சாம்பியனான அந்த அணியால் விடுவிக்கப்பட்டு, ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார்.
பெரிய ஷாட்களுக்கு பெயர் பெற்ற டிம் டேவிட், ஏலத்தில் பெரிய போட்டியை ஏற்படுத்தவில்லை. வெறும் 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். டிம் டேவிட்டை இந்த விலையில் பெற்றது ஆர்சிபி செய்த மிகப் பெரிய திருட்டுக்கு சமம் என்று பாராட்டியுள்ளார்.
யாரும் கேட்கவில்லை:
இது குறித்து பேசிய “நான் இதைச் சொல்லக்கூடாது, ஆனால் கடந்த ஏலத்திற்கு முன்பு சில ஐபிஎல் அணிகளின் முடிவெடுப்பவர்களிடம் அவரை எடுக்குமாறு கூறினேன். ஆனால் அவர்கள் அனைவரும், ‘இல்லை, அவரது ஆட்டம் பெரிதும் குறைந்துவிட்டது’ என்று கூறினர்.
“டி20 கிரிக்கெட்டின் எதிர்காலம் உயரமான, நீண்ட கைகளையும் வலுவான உடலையும் கொண்ட பேட்ஸ்மேன்களைச் சார்ந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். வைடு லைனில் மாற்றங்கள் இல்லாவிட்டால், அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆர்சிபி 3 கோடி ரூபாய் அடிப்படை விலையில் எடுத்த வீரர், தனது ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளார்.”
- இது உண்மையான திருட்டு:
“ஆஸ்திரேலியா அவரை மேல் வரிசையில் அனுப்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆர்சிபிக்கு இது ஒரு உண்மையான திருட்டு,” என்று கூறினார்.2025 ஐபிஎல் தொடரில் டேவிட் ஆர்சிபிக்காக அபாரமாக ஆடினார். ஒன்பது இன்னிங்ஸ்களில் 187 ரன்கள் குவித்து, 62.33 சராசரி மற்றும் 185.15 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.
இதையும் படிங்க: சூரியகுமார் கம்பீர் மோதல்.. காரணமான கில்.. ஜெய்ஸ்வாலுக்காக போராட்டம் – வெளியான தகவல்கள்
29 வயதான இவர், ஆர்சிபி தனது முதல் டைட்டிலை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.தற்போது நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், சிங்கப்பூரில் பிறந்த இவர் டார்வினில் நடந்த முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடி, அரைசதங்கள் அடித்துள்ளார். தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மற்றும் மூன்றாவது மற்றும் இறுதி போட்டி ஆகஸ்ட் 16, சனிக்கிழமை கெய்ர்ன்ஸில் உள்ள கஸாலிஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.






