வெஸ்ட் இண்டீஸ் CPL 2025.. போட்டி அட்டவணை மற்றும் இந்தியாவில் எந்த டிவியில் பார்க்கலாம்? – முழு தகவல்கள்

0
106
CPL

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தும் சிபிஎல் டி20 தொடரின் ஆண்டுக்கான போட்டி அட்டவணை மற்றும் ஒளிபரப்பு விபரங்கள் வெளியாகி இருக்கிறது.

கடந்த 12 ஆண்டுகளாக சிபிஎல் டி20 தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெறும் இந்த தொடரில் நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, அடுத்து ஐபிஎல் ஸ்டைலில் நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

- Advertisement -

மொத்தம் ஆறு அணிகள்

இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கு பெறுகின்றன. தி பால்கன்ஸ் அணி கிரீஸ் கிரீன், அமேசான் வாரியர்ஸ் அணி இம்ரான் தாகிர், தி பார்படாஸ் ராயல்ஸ் அணி ரோமன் பவல், செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி பாப் டு பிளேசிஸ், செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி ஆண்ட்ரூ ப்ளட்சர், தி ட்ரீன்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கீரன் பொல்லார்டு ஆகியோர் கேப்டன்களாக இருக்கிறார்கள்.

இந்த தொடர் ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 21 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடரில் அனைத்து ப்ளே ஆப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி கயானா மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நேரம் மற்றும் எந்த டிவியில் பார்க்கலாம்

இந்தத் தொடரில் அனைத்து போட்டிகளையும் இந்திய நேரப்படி அதிகாலை 4:30 மணிக்கு பார்க்கலாம். மேலும் போட்டிகள் நடைபெறும் நாளில் இரண்டாவது போட்டியை இந்திய நேரப்படி இரவு 8:30 மணிக்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க : கம்பீர் திரும்பி வந்தா நான் இதை விரும்ப மாட்டேன்.. 2 பேருக்கு நன்றி சொல்லிக்கிறேன் – வாஷிங்டன் சுந்தர் பேட்டி

மேலும் இந்த தொடரை இந்தியாவில் டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்சில் பார்க்கலாம். ஆன்லைனில் பேன்கோடு அப்ளிகேஷனில் பார்க்கலாம். டி20 மிக அதிரடியாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விளையாடுவார்கள் என்பதால் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -