தென்னாப்பிரிக்க வீரர் பிரவீஸ் புதிய சாதனை.. 56 பந்துகளில் 125 ரன்கள் குவிப்பு.. பந்துவீச்சில் தடுமாறிய ஆஸ்திரேலியா

0
74

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் தற்போது ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தென்னாப்பிரிக்கா வீரர்கள் சிதறடித்திருக்கிறார்கள்.

டார்வின் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டாப் 3 வீரர்களும் நல்ல தொடக்கத்தை பெற்றாலும், அதை பெரிய ஸ்கோர் ஆக மாற்ற முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

125 ரன்கள் குவிப்பு:

எய்டன் மார்க்கரம் 18 ரன்களிலும், ரியான் ரிக்கல்டன் 14 ரன்களிலும், பிரிட்டோரியஸ் 10 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.57 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா தடுமாறிய நிலையில் சிஎஸ்கே வீரர் பிரவீஸ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.

ஒரு கட்டத்தில் பிரவீஸ் ஆஸ்திரேலியா பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தார்.தீபாவளி சங்கு சக்கரம், வாண வேடிக்கை போல் களத்தில் நின்று சுழன்று அடித்த பிரவீஸ் 41 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இளம் வீரர் என்ற சாதனை:

இதன் மூலம் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமை பிரவீஸ்க்கு கிடைத்திருக்கிறது.இதேபோன்று ஸ்டெப்ஸ் 31 ரன்களில் ஆட்டம் இழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெண்டர் டூசன்  ஐந்து ரன்களில் வெளியேறினார்.

இதையும் படிங்க: இங்கில பும்ரா செஞ்சது தப்பு.. சிராஜ் நல்லி பாயா சாப்பிடுற ஆளா இருக்க கலக்கிட்டார் – அசாருதீன் பேச்சு

ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும், தொடர்ந்து அதிரடி காட்டிய பிரவீஸ் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 56 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார்.இதில் 12 பவுண்டரிகளும், எட்டு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 223 என்ற அளவில் இருந்தது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு  218 ரன்கள் எடுத்திருக்கின்றது.

- Advertisement -