2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறித்து செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
அடுத்த மாதம் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேடில் ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை டி20 கிரிக்கெட் படிவத்தில் நடைபெற இருப்பதால் சூரியகுமார் தலைமையிலான இந்திய டி20 அணி களம் இறங்குகிறது.
இரண்டு வீரர்களுக்கு இடம் இருக்காது
இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டின் எதிர்கால வீரர்களாக பார்க்கப்படும் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இடம் கிடைக்காது என கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடி வந்திருக்கும் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து தற்போது மறுவாழ்வுக்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்து வருகிறார். அவர் எவ்வளவு வேகத்தில் குணமடைகிறார் என்பதை பொறுத்து கேப்டன்சி மற்றும் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஐந்து பேர் உறுதி
மேலும் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய ஐந்து வீரர்கள் சிறப்பாக டி20 இந்திய அணியில் பொருந்தி விட்டதால், இவர்களை மாற்ற இந்தியத் தேர்வுக்குழு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இடம்பெற மாட்டார் என்றும் தெரிகிறது. பும்ரா கட்டாயம் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. துணை கேப்டன் பொறுப்பு கில்லுக்கா அல்லது அக்சர் படேலுக்கா? என்பதில் மட்டுமே தற்போது இழுபறியான நிலைமை சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க : சாம்சன் சிஎஸ்கேவுக்கு செட்டாக மாட்டார்.. அவர் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற இதுவே காரணம் – முன்னாள் சிஎஸ்கே வீரர்
2025 ஆசிய கோப்பை உத்தேச இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா – பிரசித் கிருஷ்ணா, ஜுரேல் – ஜிதேஷ் சர்மா.






