இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர் மற்றும் சிராஜ் இருவரையும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் பாராட்டி இருக்கிறார்.
இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அனைவரது கணிப்பையும் உடைத்து இரண்டு என சமன் செய்தது. இதைத்தொடர்ந்து இந்திய இளம் டெஸ்ட் மணிக்கு வெளியில் இருந்து பாராட்டுக்கள் வந்து கொண்டிருக்கிறது.
வாஷிங்டன் சுந்தர் ஏற்படுத்திய தாக்கம்
நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்கவில்லை. அதே சமயத்தில் அவரை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைத்தார்கள். பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் வந்த அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
மேலும் பந்துவீச்சிலும் அவருடைய தாக்கம் சிறப்பாக இருந்தது. இங்கிலாந்து சுழல் பந்து வீச்சாளர்களை விட வாஷிங்டன் சுந்தர் சிறப்பான வந்து விஜய் வெளிப்படுத்தினார். மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி சதம் அடித்து போட்டியை டிரா செய்தார். மேலும் கடைசி போட்டியில் அதிரடி அரைசதம் அடித்து இந்திய அணி 6 ரன்னில் வெள்ள உதவினார்.
50 டெஸ்ட் உறுதி
இது குறித்து பேசி உள்ள கிரேக் சேப்பல் கூறும்பொழுது ” வாஷிங்டன் சுந்தர் இந்திய டெஸ்ட் அணியில் தன்னை முதன்மை ஆல் ரவுண்டராக உருவாக்காவிட்டால் நிச்சயம் நான் ஆச்சரியப்படுவேன். ஏனென்றால் அதற்கான எல்லா திறமையும் அவரிடம் இருக்கிறது. மேலும் குறைந்தபட்சம் 50 டெஸ்ட் போட்டிகள் ஆவது இந்திய அணிக்காக அவர் விளையாடுவார்”
இதையும் படிங்க : ஆசிய கோப்பை.. அட்டகாசமான ஆப்கான் அணி அறிவிப்பு.. இந்தியா உள்பட எல்லா அணிக்கும் சவால்
“மேலும் ஒரு புதிய சூழ்நிலையில் 6 வார காலங்களில் 185 ஓவர்கள் பந்து வீசுவது சாதாரண விஷயம் கிடையாது. முகமது சிராஜ் இந்த வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் பும்ரா இல்லாத நிலையில் வந்து அவர் வெற்றிகளை தேடி கொடுத்தது இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய நம்பிக்கையை அளிப்பதாக இருக்கிறது” என்றும் பாராட்டி இருக்கிறார்.






