இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்திற்கு சென்று இறுதியில் இந்தியா பக்கம் திரும்பியது. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
கேள்விக்குள்ளாகும் பாஸ்பால்
கடந்த ஆண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி இந்தியா வந்தது. அந்தத் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நான்குக்கு ஒன்று என அபாரமாக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது இளம் இந்திய அணி இங்கிலாந்து விளையாட சென்றது.
இதன் காரணமாக இந்திய அணி தொடரை ஒன்றுக்கு மூன்று என தோற்று விடும் என பலரும் கூறி வந்தார்கள். இப்படியான நிலையில் இரண்டுக்கு இரண்டு என இந்திய அணி தொடரை சமன் செய்து இருப்பதால், டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக அணுகவும் இங்கிலாந்தின் பாஸ்பால் முறை மீண்டும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.
யாரும் அழப்போவது கிடையாது
இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறும்போது இப்படி ஒரு தொடரில் நீங்கள் கடைசியில் விளையாட முடியாமல் போவது மிகவும் கடினமானது. சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின. இந்த போட்டியை வென்று தொடரையும் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றம் தருகிறது. ஆனாலும் அணி விளையாடிய விதத்தில் பெருமைப்படுகிறேன். வோக்ஸ் எல்லா நேரத்திலும் பேட்டிங் செய்ய தயாராகவே இருந்தார்”
இதையும் படிங்க : என் கனவு சிராஜ்.. கேப்டன் பதவி ஈசிதான்.. அதுக்கு முக்கியமான காரணம் இவங்க ரெண்டு பேர்தான் – கில் பேட்டி
“இந்த முழு தொடருமே மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் அணியை பற்றி யார் என்ன சொன்னார்கள் என்பது குறித்து எங்களுடைய வீரர்கள் யாருமே அழுது கொண்டு தூங்கப் போவது கிடையாது. இந்த டெஸ்ட் போட்டிக்கு வந்த எங்களுடைய வேகப் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் ஒருவர் இல்லாத பொழுதும் அவர்கள் செயல்பட்ட விதம் பெருமை அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






