இங்கிலாந்து பிட்ச்சில் போட்ட மாஸ் ஸ்கெட்ச்.. வினோதமாக விளையாடிய விதி.. இந்திய அணிக்கு சாதகம்.. என்ன நடந்தது?

0
374
Woakes

இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து கொண்டு வந்த மிகச் சிறப்பான திட்டம் விதியின் விளையாட்டால் வீணாகி இருக்கிறது. காரணமாக தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் பலம் சமநிலை அடைந்திருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையே தற்பொழுது லண்டன் ஓவல் மைதானத்தில் தொடரில் இறுதி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தற்போது இந்திய அணி முதல் நாளில் ஆறு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் அட்டகாச பிளான்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி காயமடைந்ததாலும், மேலும் ஐந்தாவது போட்டிக்கு ரிஷப் பண்ட் கிடைக்க மாட்டார் என்பதாலும், இந்திய அணி பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக கரூர் நாயர் போன்ற முழுமையான பேட்ஸ்மேனை விளையாட வைக்கவே அதிக வாய்ப்புகள் இருந்தது. எனவே நான்காவது வேகப்பந்துவீச்சாளராக சர்துல் தாகூரை விளையாட வைக்க மாட்டார்கள் என்று தெரிந்தது.

இதை உணர்ந்து கொண்ட இங்கிலாந்து உடனடியாக நடப்பு டெஸ்ட் தொடரில் முதல்முறையாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக புல் இருக்கும்படி ஆடுகளத்தை அமைத்தது. மேலும் மூன்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் மற்றும் ஒரு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என பேட்டிங் வரிசையை 10 வரையில் நீட்டித்துக் கொண்டது. மேலும் இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் வரும்பொழுது, இந்தியா அணியால் ஆடுகளத்தை பயன்படுத்த முடியாது மேலும் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால் அடித்து விளையாடலாம் என்று இங்கிலாந்து திட்டம் தீட்டியது.

- Advertisement -

விதி விளையாடியது

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் நேற்று பீல்டிங் செய்யும் பொழுது தோள்பட்டையில் காயம் அடைந்து வெளியேறினார். அவருடைய காயம் குறித்து பேசி உள்ள சக இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் “அவரது காயம் நல்ல முறையில் இல்லை. நாங்கள் இது குறித்து இன்னும் பேசவில்லை. ஆனால் மேற்கொண்டு அவர் போட்டியில் விளையாடினால் நான் ஆச்சரியப்படுவேன்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் விளையாடுவது சந்தேகம் என்று தெளிவாகிறது.

இதையும் படிங்க : ஜெயஸ்வால் கூட உட்கார்ந்து பேசுங்க.. பையனுக்கு இந்த 2 டெக்னிக் பிரச்சனை இருக்கு – கவாஸ்கர் சுட்டிக் காட்டல்

தற்போது கிறிஸ் வோக்ஸ் விளையாடுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் இங்கிலாந்து அணிகளும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்களிடம் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர்களான ஜோ ரூட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் மட்டுமே இருக்கிறார்கள். இந்திய அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் ஆவார்கள். தற்போது இதன் காரணமாக இந்திய அணியின் பந்துவீச்சு வலிமை இங்கிலாந்து அணியை ஏறக்குறைய தாண்டி இருக்கிறது என்றே கூறலாம். இங்கிலாந்து அணிக்கு விதி வித்தியாசமாக விளையாடிவிட்டது!

- Advertisement -