களத்தில் மோதி கொண்ட் பென் டக்கட், சிராஜ்.. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து.. வெல்லுமா இந்தியா?

0
268

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் ஆக்ரோஷமாக மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. களத்தில் இரு அணி வீரர்களும் திட்டிக் கொள்வதும் மோதிக் கொள்வதும் என இருப்பதால் ஆக்சன் சினிமா போல் லார்ட்ஸ் டெஸ்ட் மாறிவிட்டது.

இந்த சூழலில் இரு அணிகளும் சரியாக முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்திருக்கிறது. இதனால் யாருமே முன்னிலை பெறாமல்  இருந்தார்கள். இந்த தருணத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் எடுத்து பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் விளையாடி வருகிறது.

- Advertisement -

டக்கட், சிராஜ் மோதல்:

ஆனால் இந்திய அணி பவுலர்களும் ஆக்ரோஷமாக அட்டாக்கிங் மோடில் செயல்படுகின்றனர். இதனால் இங்கிலாந்து விக்கெட்டுகளும் விழுந்த வண்ணம் உள்ளன. விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி நான்காவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

இந்த சூழலில் பவுண்டரி அடித்து அதிரடியாக ஆட முற்பட்ட நிலையில் சிராஜ் வீசிய ஒரு பந்தை அடித்து ஆடும் முற்பட்டு பும்ராவிடம் கேட்ச் ஆனார். இதன் மூலம் 22 ரன்களில் இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது. விக்கெட்டை எடுத்தவுடன் சிராஜ் ஆக்ரோஷமாக கத்தினார். இதனால் கடுப்பான பென் டக்கட்  நடந்து செல்லும் போது சிராஜை மோதி விட்டு சென்றார்.

- Advertisement -

3 விக்கெட் இழந்த இங்கிலாந்து:

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் நடுவர் சிராஜை கண்டித்தார். எனினும் இதன் ரிப்ளேவை பார்க்கும் போது பென் டக்கட் தான் சிராஜை வந்து மோதியது தெரிய வந்தது. இதனால் இருவருக்கும் போட்டி ஊதியத்திலிருந்து அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

இதையும் படிங்க: எங்க மேல இவ்ளோ கோபப்படுறாரு.. அவர் மட்டும் அதை செஞ்சது நியாயமா.? இங்கி கோச் சவுத்தி கேள்வி

இதேபோன்று ஆலி போப் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராஜிடம் lbw ஆனார். முதலில் இதற்கு நடுவர் அவுட் தர மறுத்தார். எனினும் சிராஜ் வற்புறுத்தி drs கேட்டதால் கில் டிஆர்எஸ் எடுத்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு இரண்டாவது விக்கெட் கிடைத்தது. இந்த தருணத்தில் ஜாக் கிராலி நிதிஷ் குமார் பந்தை அடித்தாட முற்பட்டபோது கல்லி பகுதியில் ஜெயஸ்வாலிடம் பிடிபட்டார். இதன் மூலம் இங்கிலாந்து அனி 50 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது.

- Advertisement -