இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி வலிமையாக இருந்த போதும் தங்களால் தோற்கடிக்க முடியும் என இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் குவிக்க, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 407 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தற்போது மூன்றாவது நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து ஒட்டுமொத்தமாக 244 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. எனவே இந்த போட்டியில் இப்போதைக்கு இந்திய அணியின் கைகளே ஓங்கி இருக்கிறது.
இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
இந்திய அணி தற்பொழுது எங்கிருந்து குறைந்தபட்சம் 250 ரன்கள் எடுத்து, குறைந்தபட்ச இழக்காத 500 ரன்கள் கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒருவேளை ஆட்டம் இந்தியாவின் வசம் எளிதாக அமையும் பொழுது, வேகமாக பேட்டிங் செய்து இன்னும் இலக்கை அதிகமாக்கி குறைந்தபட்சம் 15 முதல் 20 ஓவர் இன்று இங்கிலாந்து அணியை விளையாட வைக்க வேண்டும்.
மேலும் இந்திய அணி 110 ஓவர்கள் பந்து வீசும் என்றால் இரண்டு புதிய பந்துகளை வீசும். இரண்டு புதிய பந்துகளும் 60 ஓவர்களுக்கு தாக்கத்தை தரக்கூடியதாக இருக்கும். இந்த 110 ஓவர்களில் புதிய பந்தில் தாக்கம் தரக்கூடிய 60 ஓவர்களை பயன்படுத்தி வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட் கைப்பற்ற வேண்டும். மேலும் இடையில் உள்ள 50 ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஒன்று இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் இந்திய அணியின் வெற்றியை தடுக்க முடியாது.
இந்திய அணியை தோற்கடிப்போம்
இந்த நிலையில் இந்த போட்டி குறித்து பேசி உள்ள ஹாரி புரூக் கூறும்பொழுது “உண்மை இப்போதைக்கு இந்தியா முன்னிலையில் உள்ளது. ஆனால் நாங்கள் இன்று இரண்டு விக்கட்டுகள் முன்கூட்டியே எடுத்தால் எங்களால் இந்திய அணியை அழுத்தத்தில் தள்ள முடியும். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர்களின் கடைசி கட்டமைக்கட்டுகளை இரண்டு இன்னிங்ஸ்களிலும் வேகமாக கைப்பற்றினோம். அதையே இன்றும் செய்தால் எங்களுக்கு வெற்றி பெறும் அளவுக்கு இலக்கு கிடைக்கும்”
இதையும் படிங்க: நான் என்னையும் இவரையும் நம்புறேன்.. ஆனா ஆகாஷ் தீப் சொன்ன வார்த்தை மறக்க முடியாது – சிராஜ் பேட்டி
“உலகில் உள்ள அனைவரும் எங்கள் குறித்து நினைப்பது போலவே என்ன இலக்கு இருந்தாலும் அதை நாங்கள் துரத்த போகிறோம் என்பது உண்மை. எங்களுக்கு இன்று காலை என்ன செய்ய வேண்டும்? என்கின்ற தெளிவு இருக்கிறது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுத்து அவர்களை அழுத்தத்தில் தள்ளப் போகிறோம்” என்று கூறியிருக்கிறார்.






