நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆறு விக்கெட் கைப்பற்றியதற்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணி 84 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முன்னூறு ரண்களுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறகு புரூக் மற்றும் ஸ்மித் அதிரடியின் காரணமாக அந்த 500 ரன்களுக்கு மேல் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது சிராஜ் அற்புத பந்துவீச்சின் காரணமாக 407 ரன்னில் இங்கிலாந்து அணி கட்டுப்படுத்தப்பட்டது.
சிராஜின் ஆச்சரியப்படுத்தும் புள்ளிவிபரம்
நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு சிராஜிடம் இருந்து நல்ல சப்போர்ட் கிடைக்கவில்லை. இது குறித்து பேசி இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்கள் அதிகம் கொடுக்காமல் சிராஜ் பந்து வீசவேண்டும் எனவும், எல்லாவற்றையும் பும்ராவே செய்ய வேண்டும் என்றால் முடியாது எனவும் விமர்சனம் செய்திருந்தார்.
மேலும் முகமது சிராஜின் டெஸ்ட் வாழ்க்கையை பார்க்கும் பொழுது பும்ரா விளையாடாத பொழுதும், ஷமி விளையாடாத பொழுதும், இவர்கள் இருவருமே விளையாடாத பொழுதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆவரேஜ் வைத்திருக்கிறார். முதன்மை பவுலர்கள் இல்லாத பொழுது சிராஜ் பொறுப்பு எடுத்துக் கொள்ளும் வீரராக இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. நேற்றும் பும்ரா இல்லாத நிலையில் மிகச் சிறப்பாக பந்துவீசி இருக்கிறார்.
சச்சின் தெரிவித்த வாழ்த்து
முதல் டெஸ்டில் முகமது சிராஜ் பந்துவீச்சில் துல்லியம் மிகவும் குறைவாக இருந்தது. காரணம் அவரிடம் கட்டுப்பாடு இல்லை. இதனால் பந்தை பல இடங்களில் சிதறடிக்க இங்கிலாந்து அணியால் எளிதாக ரன்கள் எடுக்க முடிந்தது. ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 2வது டெஸ்ட்டை இந்திய அணி வெல்ல முடியுமா?.. 4வது நாளில் என்ன செய்ய வேண்டும்?.. மீண்டும் அது நடக்கக்கூடாது
இதுகுறித்து சச்சின் தெரிவித்துள்ள வாழ்த்தில் ” சிராஜிடம் நான் கவனித்த மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், சரியான இடங்களில் துல்லியமாக தொடர்ந்து நிலைத்தன்மையுடன் அவர் பந்து வீசுவதுதான். அவரது விடாமுயற்சிக்கு ஆறு விக்கெட்டுகள் கிடைத்திருக்கின்றன. ஆகாஷ் தீப்பும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.






