இங்கிலாந்து அணிக்கு எதிராக முன்னிலை பெற வேண்டிய இந்திய அணி தடுமாறிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கம்பீரின் பயந்த அணுகுமுறைதான் இதற்கெல்லாம் காரணம் என இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 84 ரன்னுக்கு முக்கிய ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் இங்கிருந்து தொடர்ந்து ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் அந்த அணி 350 ரன்களை தாண்டி இருக்கிறது.
டெஸ்ட் போட்டியை வெல்ல என்ன செய்யணும்?
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவனில் மூன்று ஆல் ரவுண்டர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. அவர்கள் தற்போதைய இங்கிலாந்து ஆடுகள தன்மைக்கு விக்கெட் எடுக்கக் கூடியவர்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எட்டாவது இடத்தில் பேட்டிங் வேண்டும் என கம்பீர் தற்காப்பு அணுகுமுறையில் சென்றது தான் இதற்கு காரணம்.
அதே சமயத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் நானூறு ரண்களுக்கு மேல் எடுத்தாலும் கூட தோற்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனால் எதிரணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினால் பெரும்பாலும் தோற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்காது. எனவே பிளேயிங் லெவனில் விக்கெட் கைப்பற்றும் அதிரடியான பந்துவீச்சாளர்கள் தேவை. இந்த நிலையில்தான் குல்தீப் யாதவை கம்பீர் கழட்டி விட்டிருந்தார்.
விராட் கோலி செய்ததை செய்யணும்
பொதுவாக பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐந்து பேட்ஸ்மேன்கள், ஐந்து முழுமையான பவுலர்கள் மற்றும் ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என அணி அமைக்கப்படும். விராட் கோலி இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆனதும் இதே முறையை மீண்டும் கொண்டு வந்தார். இதன் காரணமாக எதிரணியின் 20 விக்கெட்டுகளை அவர் அதிக முறை கைப்பற்றினார். இதன் காரணமாகவே அவர் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டனாக இருக்கிறார்.
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் வரலாற்றில் முதல் முறை சோகம்.. 13 வருடம் கெத்து காட்டும் கோலி கேப்டன்சி.. என்ன தவறு நடக்கிறது?
இப்படியான நிலையில் பும்ரா விளையாடாத சூழலில் நிச்சயம் குல்தீப் யாதவை விளையாடு இருக்க வேண்டும். ஆனால் கம்பீர் டெஸ்டில் தொடர் தோல்விகள் காரணமாக பயந்து கொண்டு பேட்டிங் வரிசையை நீளமாக்கினார். இந்த அணுகுமுறைதான் ரன்கள் அதிகம் எடுக்கும் போட்டியை வெல்ல முடியாத சூழலுக்கு இந்திய அணியை தள்ளிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விராட் கோலியின் அணுகுமுறைக்கு கம்பீர் வரவேண்டும் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.






