இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காம் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த சூழலில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் மூன்று வீரர்கள் அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.
பும்ராவுக்கு உடல் தகுதி பிரச்சனை இருப்பதால் அவரை பாதுகாக்க இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் சர்துல் தாக்கூர் முதல் டெஸ்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் அவர் நீக்கப்பட்டு நிதீஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று தமிழக வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அணி எடுத்த தவறான முடிவு:
இதுதான் தற்போது சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆனால் இந்திய அணி பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக இப்படி மாற்றம் செய்திருக்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கருண் நாயர் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும் என்பதற்காக சாய் சுதர்சன் நீக்கப்பட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் குற்றச்சாட்டு உள்ளனர். இதேபோன்று இந்திய அணியில் முன்னணி சுழற் பந்துவீச்சாளரில் ஒருவராக திகழும் குல்திப் யாதவ், இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளது.
காலை வாரிய ராகுல்:
ஆனால், அவருக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே சஞ்சய் மஞ்சுரேக்கர் ராகுலுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.ஒரு போட்டியில் சதம் அடித்து விட்டு அப்படியே ஒப்பேத்தி விடாதீர்கள் என்று அவர் சாடி இருந்தார். தற்போது அவர் சொன்னதற்கு ஏற்றார் போல் நடந்திருக்கிறது.
தொடக்க வீரராக களம் இறங்கிய ராகுல் 26 பந்துகளை எதிர் கொண்டு வெறும் இரண்டு ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பி இருக்கிறார். இதனால் இந்திய அணி 15 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. இந்த சூழலில் பிர்மிங்காம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இதுவரை இந்தியா வெற்றி பெற்றது கிடையாது.
இதையும் படிங்க: 2வது டெஸ்ட்.. இந்திய அணியில் 3 மாற்றங்கள்.. கம்பீர் செய்ததை ஏற்க முடியாது.. இந்திய ரசிகர்கள் கோபம்
அதிலும் ராகுல் பிர்மிங்காமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடி இருக்கிறார். இதுவரை மூன்று இன்னிங்ஸில் விளையாடியுள்ள ராகுல் மொத்தமாகவே 19 ரன்களை தான் அடித்திருக்கின்றார். இதில் அவருடைய பேட்டிங் சராசரி 6.3 என்று அளவில் இருக்கின்றது. பிர்மிங்காமில் 4, 13 ,2 ஆகிய ரன்களை தான் ராகுல் அடித்துள்ளார்.






