இந்திய டெஸ்ட் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இந்திய தேர்வுக்குழு தலைவர் அகர்கர் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும், சில வீரர்களை நீக்கி அணியை தேர்வு செய்ய வேண்டும் எனவும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் தெரிவித்திருக்கிறார்.
தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால் இந்திய டெஸ்ட் அணி மிகவும் இளமையாக அனுபவம் இல்லாமல் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அணியை தேர்வு செய்யும் பொழுது கவனமாக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.
வெளிநாட்டு மண்ணில் இந்திய அணியின் பிரச்சனை
ஆசியா தாண்டி வெளிநாடுகளுக்கு இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் விளையாட செல்லும் பொழுது சுழல் பந்துவீச்சு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அந்தந்த அணிகளின் சுழல் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்ற இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் தடுமாறி வருகிறார்கள்.
பெரும்பாலும் ரவீந்திர ஜடேஜா வெளிநாடுகளில் முதன்மை சுழல் பந்துவீச்சாளராக விளையாடியிருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு சில வாய்ப்புகளை தற்சமயத்தில் வாஷிங்டன் சுந்தர் பெற்றிருக்கிறார். ஆனால் இவர்களால் வெற்றிகரமாக இருக்க முடியவில்லை. வெற்றிகரமாக இருந்த ஒரே பவுலராக குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட் கைப்பற்றினார்.
அகர்கர் தைரியமாக இருக்க வேண்டும்
இதுகுறித்து கிரேக் சேப்பல் கூறும்பொழுது ” இங்கிலாந்து சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜா முதன்மை சுழல் பந்துவீச்சாளராக இருக்க முடியாது. அவரது பேட்டிங் தேவைப்பட்டால் அவர் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக இருக்கலாம். இல்லையென்றால் அவரை மறு பரிசீலனை செய்வது அவசியம். இந்தியா இந்த தொடரில் வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்றால் சமநிலை கொண்ட அணியை உருவாக்க வேண்டும்”
இதையும் படிங்க : சிராஜ் பவுலர் கிடையாது.. கம்பீர் இத புரிஞ்சுகிட்டு அந்த வேலையை ஸ்டார்ட் பண்ணனும் – இர்பான் பதான் விமர்சனம்
“எட்டாவது இடத்தில் வரும் பேட்ஸ்மேன் ரன்கள் எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. உங்கள் அணியின் முதல் ஆறு பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்களிடம் 20 விக்கெட் கைப்பற்றும் அளவுக்கு சிறந்த ஐந்து பந்து வீச்சாளர்கள் இருக்க வேண்டும். எனவே வெற்றி பெற வேண்டும் என்றால் அகர்கர் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். அவர் இதில் தயக்கம் காட்டக்கூடாது. அணியை தேர்வு செய்யும் பொழுதே அவர் சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்






