நாங்க டேல் ஸ்டெயினுக்கு செஞ்ச மாஸ்டர் பிளான.. இந்தியா பும்ராவுக்கு செய்யணும் – ஏபி டிவில்லியர்ஸ் கோரிக்கை

0
88
Bumrah

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பணிச் சுமையை நிர்வகிக்க, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் டேல் ஸ்டெயினுக்கு செய்த ஒன்றை அப்படியே பின்பற்ற வேண்டும் என ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதல் போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தினால் எந்த மூன்று போட்டியில் அவரை விளையாட வைப்பது என்பது பெரிய குழப்பமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே வந்த எச்சரிக்கை

பும்ராவின் ஆரம்ப காலகட்டத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட துவங்கியதில் இருந்து, இந்தியாவில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வைக்க வேண்டாம் என கூறப்பட்டது.

அதே சமயத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினால் ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதால் எல்லா டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டிய அவசியம் உருவாகினது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்றால் அவருடைய பணிச்சுமை மிக அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி ஒரு முறை அதே பகுதியில் காயம் அடைந்து அறுவை சிகிச்சை நடந்தால் அவர் கிரிக்கெட் வாழ்க்கை முடியவும் செய்யும் ஆபத்து இருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ இதை செய்ய வேண்டும்

இது குறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும் பொழுது “தற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் பும்ரா தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். அவருக்கு நிறைய பணிச்சுமை இருக்கிறது. டேல் ஸ்டெயின் தென் ஆப்பிரிக்க அணிக்கு விளையாடிய காலகட்டத்தில் முக்கியத்துவம் குறைந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் நாங்கள் அவரை விளையாட வைக்கவில்லை. இதன் மூலம் அவரது பணிச்சுமையை நிர்வகித்தோம். எனவே பும்ராவுக்கும் இதையே செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : சிகிச்சையில் கண்விழித்ததும்.. ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி இதுதான்.. மெடிக்கல் மிராக்கிள் – மருத்துவர் பேட்டி

“தவறான நிர்வாகத்தின் காரணமாகவா அல்லது காயத்திலிருந்து மீண்டு வந்ததாலோ இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஒரு பயிற்சியாக பார்த்திருக்கலாம். இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரை ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முழுவதுமாக விளையாட முடியாது என்று கூறியிருக்கலாம். எனவே இதை நாம் மதிக்க வேண்டும். அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டியது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் பொறுப்பு” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -