இந்திய அணி அடுத்த மாதம் ஜூலை இரண்டாம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன்பான பயிற்சி முகாமில் இந்திய அணி நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டிகள் தோற்ற காரணத்தினால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. மேலும் பும்ரா விளையாடுவாரா இல்லையா? என்பது பெரிய கேள்வி குறியாக இருந்து வருகிறது.
நம்பிக்கை தரும் பயிற்சி
தற்போது இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்திய பயிற்சி முகாமில் இளம் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் மற்றும் ஆகாஷ் தீப் மிகக் கடுமையான பயிற்சி செய்து வருகிறார்கள். இதன் காரணமாக இவர்கள் இருவரில் ஒருவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் இரண்டு நாளாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா இடத்தில் இவர்கள் இருவரில் ஒருவர் விளையாடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்திய முகாமுக்கு மகிழ்ச்சி செய்தி
இந்த நாளில் இந்திய பயிற்சி முகாமுக்கு முதல் நாள் வராத நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இரண்டாவது நாளில் இன்று வந்தார். மேலும் பயிற்சிக்கு வந்தவர் அதிகப்படியான ஓவர்களை பந்து வீசி பயிற்சியும் செய்தார். இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க : தெஆ 64 ஆண்டு ரெக்கார்ட்.. 19 வயது வீரரின் அசத்தல்.. சிஎஸ்கே பிரிவிஸ் டெஸ்டில் டி20 பேட்டிங்.. முதல் டெஸ்ட்
தற்போதைய சூழ்நிலையில் பும்ரா இரண்டாவது டெஸ்டில் விளையாடினால் மட்டுமே வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு இந்திய அணிக்கு இருக்கிறது. பும்ரா விளையாடாவிட்டால் இந்திய பவுலிங் யூனிட் மேலும் பலவீனமடையும் என்பது உறுதி. அத்துடன் இங்கிலாந்து தொடரை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்புக்குள் சென்று விடும். எனவே தற்போது பும்ரா பயிற்சிக்கு வந்து பயிற்சி செய்திருப்பது இந்திய முகாம் மற்றும் இந்திய அணிக்கு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது.






