தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியில் இருந்து ஒரு இளம் வீரர் திடீரென இந்தியாவிற்கு கிளம்பி விட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. இதற்குப் பின்னணி காரணங்கள் குறித்த அதிரடி தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் லீட்ஸ் மைதானத்தில் மோதிக்கொண்ட முதல் போட்டியில் குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்ய வேண்டிய வாய்ப்பில் இருந்த இந்திய அணி தோற்றுக் கோட்டைவிட்டது. இதன் காரணமாக இந்திய அணி மீது விமர்சனங்கள் உருவாகியிருக்கிறது.
தவறான தக்கவைப்பு
இந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய ஏ அணியில் அனைவரும் இந்தியா திரும்பி விட்டார்கள். ஆனால் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ரானா மட்டும் இந்திய அணியில் தக்கவைக்கப்பட்டார். மேலும் அந்த இடத்தில் அன்சூல் காம்போஜ் தக்கவைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் செல்லப் பிள்ளை என்கின்ற காரணத்தினாலே அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும், இது இந்தியத் தேர்வுக் குழுவுக்கு எதிரான முடிவு எனவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. தற்பொழுது இதில் ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
நாடு திரும்பிய வீரர்
இப்படியான சூழ்நிலையில் ஹர்ஷித் ராணா இந்தியா திரும்பி விட்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி விளையாடுவதற்காக பர்மிங்ஹாம் புறப்பட்ட இந்திய அணிவுடன் ஹர்ஷித் ராணா காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது கம்பீர் செயல்பாட்டுக்கு எதிராக தேர்வு குழு தலைவர் அகர்கர் எடுத்த நடவடிக்கையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதையும் படிங்க : தப்பான நண்பர்களால் கெட்டுப் போயிட்டன்.. தாத்தா வரை இழந்தேன்.. இப்ப மாத்திட்டேன் – பிரித்வி ஷா பேட்டி
இதற்கு இந்திய அணி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள பதிலில், இந்திய அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு சிறிய நிக்கில் இருந்ததாகவும், இதன் காரணமாகவே ஹர்ஷித் ராணா தக்கவைக்கப்பட்டார் எனவும், போது அவர் குணமடைந்து விட்டதால், ஹர்ஷித் ராணாவை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விட்டதாகவும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






