370 ரன்.. 93 வருட வரலாற்று சாதனை.. ஆனால் இந்திய அணிக்கு சோகம்.. போட்டியை வெல்ல வாய்ப்புகள் என்ன?

0
1059
Rahul

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 370 ரன் இலக்கை நிர்ணயித்திருக்கிறது. அதே சமயத்தில் முதல் இன்னிங்ஸ் போலவே இந்த முறையும் கடைசியில் விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்து அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து 96 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் கேஎல்ராகுல் அசத்தல்

இந்த நிலையில் இன்று போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே கேப்டன் கில் பத்திரங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து கேஎல்.ராகுல் உடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 140 பந்தில் 118 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதைத்தொடர்ந்து இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் சதம் அடித்து 247 பந்துகளில் 18 பவுண்டரிகள் எடுத்து 137 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி ஒரு கட்டத்தில் 333 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அங்கிருந்து 364 ரன்னில், மேற்கொண்டு 31 ரன்கள் மட்டுமே எடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்து சரிந்தது. தற்போது இங்கிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருக்கிறது.

- Advertisement -

93 வருட வரலாறு

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் மூன்று மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு என மொத்தம் ஐந்து சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அணியின் 93 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் 5 சதங்கள் இந்திய அணிக்கு அடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 18ல் 14.. பாக் அன்வர் சாதனை.. ஆசியாவின் கிளாசிக் கேஎல்ராகுல் உடைப்பு.. வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ்

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்டோக்ஸ் அதிரடியில் இங்கிலாந்து அணி 359 ரன்களை மிரட்டி வென்று இருக்கிறது. இந்திய அணியில் பும்ராவுக்கு மற்ற பந்துவீச்சாளர்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே தற்போது வெல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இந்த ஆடுகளத்தில் ஐந்தாவது நாளும் பேட்டிங் செய்ய சாதகமாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -