இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது கிரிக்கெட் போட்டி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இந்த இரண்டு அணிகளும் மிக தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் இங்கிலாந்து அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதிப் போட்டியில் சதம் அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் அவரது சமீபத்திய டெஸ்ட் போட்டிகளின் செயல்பாடுகள் என்பது போதிய அளவு திருப்திகரமானதாக இல்லை. இந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் மீது இந்தத் தொடரில் அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.
காரணம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என்ற இரு பெரிய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் அடுத்த இடத்தில் அனுபவ வீரராக ரிஷப் பண்ட் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து பேசி இருக்கும் பண்ட் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தாதது என்கிற வகையில் அவர் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் பேட்டி
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நிச்சயமாக ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் ஆகியோர் இல்லாதது நன்றாக இருக்கிறது. ஏனென்றால் இங்கிலாந்து அணிக்காக அவர்கள் பல ஆண்டுகள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறார்கள். நான் இங்கே இரண்டு சுற்றுப்பயணங்களுக்கு மட்டுமே வந்திருக்கிறேன். இருப்பினும் இங்கிலாந்து அணியில் போதுமான பந்துவீச்சாளர்கள் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள். எங்கள் அணியும் இளமையாக இருப்பதால் நாங்கள் யாரையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
இதையும் படிங்க:இங்கி டெஸ்ட் தொடரின் தலையெழுத்த.. இந்த தமிழ்நாட்டு பையன் மாத்துவார்.. சவாலான ஆளு – பனேசர் உறுதி
அவர்கள் தங்களை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள். நாங்கள் அதே நேரத்தில் எங்கள் கிரிக்கெட்டை நன்றாக விளையாட வேண்டும். எதிர் அணியும் பந்துவீச்சாளர்களையும் மதித்து விளையாட வேண்டும். எங்கள் அணியில் மூன்றாவது இடத்தில் யார் விளையாட போகிறார்கள் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்கள் ஏற்கனவே சரி செய்யப்பட்டு விட்டன. கில் நான்காவது இடத்திலும், நான் ஐந்தாவது இடத்திலும் பேட்டிங் செய்யப் போகிறோம். வீரமுள்ள விஷயங்கள் பற்றி தொடர்ந்து விவாதிப்போம்” என அவர் பேசியிருக்கிறார்.






